மாஸ்டர் டப்பிங்கை தொடங்கிய விஜய்.. லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு!
சென்னை: மாஸ்டர் படத்தின் டப்பிங்கை நடிகர் விஜய் இன்று தொடங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Recommended Video
மேலும், குட்டி ஸ்டோரி பாடல் சூப்பரா இருக்கிறது என ஹாலிவுட் நடிகர் பில் ட்யூக் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், டப்பிங் பணிகளும் ஆரம்பமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச பாராட்டு
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல், தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து கொலை வெறி ஸ்டைலில் உருவாகி இருந்தது. குட்டி ஸ்டோரி பாட்டுக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் ரசிகர்கள் பெருகி வருகின்றனர். இந்நிலையில், ஹாலிவுட் நடிகரான பில் ட்யூக் பாராட்டியுள்ளார்.
லோகேஷ் நன்றி
great music video sir என பாராட்டி ஹாலிவுட் நடிகர் பில் ட்யூக் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துக்களை பார்த்த மாஸ்டர் பட இயக்குநர், லோகேஷ் கனகராஜ், ரொம்ப நன்றி சார் என கமெண்ட் செய்துள்ளார். தாய்லாந்து, பிலிப்பைன்ஸை தொடர்ந்து தற்போது அமெரிக்க நடிகரிடம் இருந்து பாராட்டு கிடைத்துள்ளது.

ஏப்ரல் இறுதியில்
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில வாரங்கள் செல்லும் என்றும், வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் தெரிகிறது. இதனால், மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாத இறுதியில் தான் வெளியாகும் என்றும், மார்ச் 9ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.

விஜய் டப்பிங்
மாஸ்டர் படத்தின் டீசர், இசை வெளியீட்டு விழாவின் போதே வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்துக்கான டப்பிங்கை இன்று முதல் நடிகர் விஜய் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆடியோ லான்ச் எப்போ?
பில் ட்யூக்கின் பாராட்டுக்கு, நன்றி தெரிவிக்க ட்விட்டர் பக்கம் வந்த மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜை, தளபதி ரசிகர்கள் வளைத்து, அப்டேட் எங்கே, அப்டியே போற வேகத்துல ஆடியோ லான்ச் எப்போன்னு சொல்லிட்டு போங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர். மார்ச் மாத மத்தியில் தான் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிட் பண்றதுக்கு ஒர்த்தா இருக்கும் பாஸ்!
அப்படியே போற வேகத்துல
குட்டி ஸ்டோரி பாடல் ரிலீசுக்கு பிறகு மாஸ்டர் படம் குறித்த எந்தவொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை. இயக்குநர் ரத்னகுமாரும், சில நாட்களாக மெளனியாகி விட்டார். தற்போது, லோகேஷ் கனகராஜே, ஆன்லைன் வந்துள்ளதால், அப்படியே போற வேகத்துல, அந்த அப்டேட் கொஞ்சம் சொல்லிட்டு போங்க மாம்ஸ் என தளபதி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











