இந்தா கிளம்பிட்டாருல்ல.. ஆடியோ லாஞ்ச்சுக்குள்ள ஒரு குட்டி டூர போட்றுவோம்.. வைரலாகும் விஜய் வீடியோ!
சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நடிகர் விஜய் ஓய்வெடுக்க வெளிநாடு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிக்கும் 64 வது படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
லிரிக்கல் வீடியோ
அவர்கள் மட்டுமின்றி அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லெட் மி சிங் எ குட்டி ஸ்டோரி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

இசை வெளியீடு
இந்த பாடலை நடிகர் விஜயே பாடியிருந்தார். இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருந்தாலும் ரசிகளால் அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டது. பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை பேசியது இப்பாடல். இதனை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியிருந்தார். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் 15ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் ஓய்வு
மாஸ்டர் படம் வரும் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் வெளிநாடு செல்வதற்காக ஏர்போர்ட்டிற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கூலிங் கிளாஸ்
கடைசியாக பிகில் படத்தின் ஷுட்டிங்கின் போதும் விஜய் வெளிநாடு சென்றார். அப்போது கேப்பை கொண்டு அவர் முகத்தை மறைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இம்முறை கூலிங் கிளாஸ் மட்டும் அணிந்து ஏர்போர்ட்டில் ஃபார்மாலிட்டிகளை முடித்துவிட்டு செல்கிறார் நடிகர் விஜய். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

முத்தம் போட்டோ
மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த குட்டி டூருக்கு செல்கிறார் விஜய் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டோ அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











