“நீ நதி போல ஓடிக்கொண்டிரு“..விஜய் கூறிய குட்டிக்கதை அனிமேஷன் வீடியோவாக வெளியீடு!
சென்னை : மாஸ்டர் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் விஜய் கூறிய கதையை, 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
விஜய்யின் பிறந்த நாள் நாளை கொண்ட பட உள்ள நிலையில், ரசிகர்களால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜயின் பிறந்த நாளை அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்கள் ஒரு மாபெரும் திருவிழாவைப் போல் கொண்டாட காத்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய்
நட்சத்திர நடிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனால் தன்னை எந்த நடிகரின் ரசிகராகவும் அடையாளப்படுத்திக்கொள்ளாத பொதுவான சினிமா ரசிகர்களையும் கவரும் நட்சத்திரங்களே உச்ச நட்சத்திரமாக உயர முடியும். இப்படியாக எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் என உச்ச நட்சத்திரங்களின் வரிசையில் இருப்பவர் நடிகர் விஜய்.

குட்டி ஸ்டோரி
விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் ஒரு கதை சொல்லி இருந்தார். அந்த அனைவருக்கும் ஒரு பிடித்தமான கதையாக மாறி உள்ளது. அந்த கதையில், நம் அனைவருடை வாழ்க்கையும் ஒரு நதி போல் உள்ளது. நதி ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு அதனுடைய சொந்த பாதையில் சென்று கொண்டிருக்கும். அப்படி செல்லும் போது சிலர் விளக்குகளை ஏற்றி நதியை வணங்குவார்கள். அப்போதும் நதி போய்க்கொண்டே இருக்கும்

நீ நதி போல ஓடிக்கொண்டிரு
மற்றொரு இடத்தில் சில பேர் பூக்களைத் தூவி நதியை வரவேற்பார்கள். அப்போதும் நதி போய்க்கொண்டே இருக்கும். வேறொரு இடத்தில் நம்மை பிடிக்காத சிலர் நதி மீது கல்லெறிந்து விளையாடுவார்கள். அதையும் பார்த்து நதி அமைதியாக போய்க்கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரி தான் நம்முடைய வாழ்க்கையும்.
அனிமேஷன் வீடியோ
நம்முடைய வாழ்க்கையில் நம்மை பிடித்தவர்களும் இருப்பார்கள், பிடிக்காதவர்களும் இருப்பார்கள் அவர்களை பற்றி கவலைப்படாமல் நம்ம வேலையை செம்மையா செய்துட்டு அந்த நதிமாதிரி போய்டே இருக்க வேண்டும் என்று இருந்தார்.அந்த கதைக்கு ஏற்ப அனிமேஷன் வீடியோவாக 7ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வாரிசு
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. "வாரிசு" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என சீனியர் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்


Click it and Unblock the Notifications











