Vijay :லியோ படத்தில் பாட்டு பாடிய நடிகர் விஜய்.. ஸ்டூடியோவிற்கே போகாமல் பாடல் பதிவு!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பாடல் காட்சிக்காக முன்னதாக 10 நாட்கள் வரை படக்குழுவினர் ரிகர்சல் செய்துள்ளனர். இந்தப் பாடல் சூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

லியோ படத்தில் பாடல் பாடிய நடிகர் விஜய் :நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் பிரபல ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் படத்தின் பிரம்மாண்டமான பாடல் சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக இந்தப் பாடலின் ரிகர்சல் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் முதல் பாடலின் சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பாடல் சூட்டிங் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட உள்ளதாகவும் இதில் விஜய் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தப் படத்திற்காக தற்போது எடுக்கப்பட்டு வரும் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். முன்னதாக இந்தப் பாடலின் ட்ராப்பை அனிருத் பாடி ரெக்கார்ட் செய்துள்ள நிலையில், இந்தப் பாடல் விஜய் வாய்சில்தான் படத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலையும் நேற்றைய தினமே நடிகர் விஜய் பாடிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து பிசியாக அவர் படத்தின் சூட்டிங்கில் இருந்த நிலையில், இந்தப் பாடல் பதிவை அவரது சூட்டிங் ஸ்பாட்டிலேயே அனிருத் ரெக்கார்ட் செய்துள்ளார்.

சமீபத்தில் மிகுந்த வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது மொபைல் டப்பிங் ஸ்டூடியோ. சமீபத்தில் கமல்ஹாசன் கூட இதை பயன்படுத்தினார். இந்நிலையில் விஜய்யின் பாடல் சூட்டிங் நடைபெற்றுவரும் ஆதித்யராம் ஸ்டியோவிற்கு இந்த மொபைல் டப்பிங் ஸ்டூடியோவும் கூடவே இசையமைப்பாளர் அனிருத்தும் சென்று இந்தப் பாடல் பதிவை செய்துள்ளனர். காலை 9 மணிக்கு துவங்கிய இந்த பாடல் பதிவு 10.30 மணிக்குள் நிறைவடைந்துள்ளது.
முன்னதாக அனிருத் பாடியிருந்த படத்தின் ட்ராப்பை கேட்டு விஜய் ரிகர்சல் செய்ததாகவும் அதனால் ஒரே டேக்கில் இந்தப் பாடலை குறுகிய கால அவகாசத்திலேயே பாடியதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கு இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











