லாக்டவுன் நேரத்தில் கேரியருடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. நடிகர் பகிர்ந்த சுவாரசிய தகவல்!

சென்னை: லாக்டவுன் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த தனக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக நடிகர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

புரட்சித் தலைவர் விஜய், புரட்சித் தலைவி சங்கீதா.. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

நடிகர் விஜயின் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன், ஸ்ரீமன், விஜே ரம்யா உட்பட ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜயின் நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. சஞ்சீவ் ஏற்கனவே நிலாவே வா, பத்ரி, புதிய கீதை ஆகிய படங்களில் விஜயுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகர் விஜய் தனது நண்பரான சஞ்சீவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

ரீயூனியன்

ரீயூனியன்

அதாவது நடிகர் சஞ்சீவ் ஆன்லைன் தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், விஜய் குறித்தும் மாஸ்டர் படம் குறித்தும் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் சஞ்சீவ். அதன்படி, ஸ்ரீமன், ஸ்ரீநாத் மற்றும் தானும் மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், இது தங்களின் ரீயூனியனாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாடி

கிரிக்கெட் விளையாடி

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற போது பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றதாகவும் சஞ்சீவ் கூறியுள்ளார். காற்று மாசு காரணமாக மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் சில நாட்கள் ரத்து செய்யப்பட்டது. அந்த நேரத்தில் விஜயுடன் சேர்ந்து தாங்கள் கிரிக்கெட் விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

வீட்டில் தனியாக

வீட்டில் தனியாக

மேலும் ஒரு சுவாரசிய சம்பவத்தையும் சஞ்சீவ் பகிர்ந்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனது மனைவி குழந்தைகள் என அனைவரையும் மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தாராம் சஞ்சீவ். லாக் டவுன் நேரத்தில் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

லஞ்சுடன்..

லஞ்சுடன்..

அப்போது போனில் பேசிய நடிகர் விஜய், அடுத்த 15 நிமிடங்களில் சஞ்சீவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது தனக்கு மதிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு நடிகர் விஜய் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் தனக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், விஜய் தனக்கு அருகில் வரவேண்டாம் என்று எண்ணி வீட்டு வாட்ச் மேனிடம் கொடுக்க சொன்னாராம் சஞ்சீவ்.

ரசிக்கும் ரசிகர்கள்

ரசிக்கும் ரசிகர்கள்

விஜயின் மற்றொரு நண்பரான நடிகர் ஸ்ரீமன் அண்மையில் விஜயுடன் எடுக்கப்பட்ட போட்டோக்களை ஷேர் செய்தார். அந்த போட்டோக்கள் வைரலானது. இந்நிலையில் சஞ்சீவ், நடிகர் விஜய் குறித்து பேசியிருப்பதை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். சஞ்சீவ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X