மக்கள் திலகம்னா ஒருத்தர்தான்.. சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான்.. லியோ வெற்றி விழாவில் விஜய் வேறலெவல்!
சென்னை: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுகிறார் என வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய பிரச்சனைக்கு ஒருவழியாக நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வழக்கம் போல என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து ஏகப்பட்ட விஷயங்களை தனது ஸ்டைலில் அடுக்கிப் பேசிய நடிகர் விஜய் முக்கியமான பட்டம் மேட்டரையும் பேசி அசத்தி விட்டார்.

மேலும், சோஷியல் மீடியாவில் சமீப காலமாக தனது ரசிகர்கள் கோபப்படுவதை பார்த்து கண்டித்தும் உள்ளார். நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.
விஜய் பேச்சு: லியோ ஆடியோ லான்ச்சில் மிஸ்ஸான நடிகர் விஜய்யின் பேச்சு லியோ வெற்றிவிழாவில் சிம்ம கர்ஜனையாகவே ஒலித்துள்ளது. அனைத்து விஷயங்களையும் அழகாகவும் தெளிவாகவும் எந்தவொரு சர்ச்சையை கிளப்பாத வகையிலும் பேசிய நடிகர் விஜய் கடைசியில் அந்த பட்டம் தொடர்பான பஞ்சாயத்துக்கும் முடிவு கட்டி உள்ளார்.
சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான்: மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், நடிகர் திலகம்னா ஒருத்தர்தான், சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான், உலக நாயகன்னா ஒருத்தர்தான், புரட்சி கலைஞர்னா ஒருத்தர்தான், தலன்னா ஒருத்தர் தான், நீங்கள் தான் மன்னர்கள் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்.. என தனது அரசியல் நிலைப்பாட்டையும் அதிரடியாக அறிவித்துள்ளார் தளபதி விஜய்.

டிரெண்டிங்கில் தளபதி விஜய்: நடிகர் விஜய்யின் பேச்சு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இணையத்தில் தளபதி விஜய் பேச்சு ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மேலும், நடிகர் விஜய் குட்டி ஸ்டோரியில் அந்த காக்கா, கழுகு கதையும் இழுத்து சுவாரஸ்யமாக பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லீ உள்ளிட்ட இயக்குநர்கள் மூவரும் வெவ்வேறு வகையிலான கதைகளை மக்களுக்கு கொண்டு வந்து தந்துள்ளனர். அவர்களின் அண்ணனாக இருப்பதில் எனக்குத் தான் பெருமை என்றும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











