காத்திருக்க முடியாது.. கோட் படத்தின் முக்கிய VFX காட்சி.. வெங்கட் பிரபு மாஸ் அப்டேட்!
சென்னை: விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கோட் படத்தின் முக்கிய VFX காட்சியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்தள்ளார். அதில், அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சொளத்ரியும் நடித்து வருகிறார்கள். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், எஸ் ஜே சூர்யா, லைலா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் இறுதிகட்டத்தினை நெருங்கி உள்ளது. இதில் விஜய் தன்னுடைய ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போதே டப்பிங் பணிகளை பாதி முடித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இப்படத்தில் விஜய் பாடிய முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த பாடலைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிளை ஜூன் மாதத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே இப்படம் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் எனக் கூறப்பட்டிருந்தது. இப்படத்தில் விஜய்யின் இளமைப்பருவம் டிஏஜிங் முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது. மேலும் விஜயகாந்தின் உருவமும் ஏஐ உதவியுடன் பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது.
விஎஃப்எக்ஸ் பணிகள்: செப்டம்பர் 5ந் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக வெங்கட் பிரபு அறிவித்திருந்த நிலையில், தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. இனியும் வெளியீட்டுக்காக காத்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஹாலிவுட் படங்களான அவதார், கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ், எண்ட்கேம் போன்ற படங்களுக்கு VFX செய்த குழுவினர், தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தின் VFX காட்சிகளை அமைத்துள்ளனர். இதன் மூலம் அந்நிறுவனம் கோலிவுட்டில் நுழைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











