துப்பாக்கி ரீ ரிலீஸ்! ஐ எம் வைட்டிங் காட்சிக்கு அதிர்ந்த திரையரங்கம்! ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஸ்டார் நடிகர். இவரது நடிப்பில் ஒரு படம் வெளியாகவுள்ளது என்றால் மற்ற நடிகர்கள் படத்தை ரிலீஸ் செய்ய யோசிக்கும் அளவிற்கு படத்திற்கு மாஸ் ஓப்பனிங் இருக்கும். இவர் படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே இவரது ரசிகர்களின் கொண்டாட்டம் அந்த நாளையே திருவிழா போல் மாற்றி விடுவார்கள்.

இப்படியான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது தயாரிப்பாளர்கள் விஜய் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் வெளியான கில்லி படம் ரீ ரிலீஸ் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படமாக மாறியது. புதுப்படங்களில் வசூல் வேட்டை நடத்தி வந்த விஜய் படங்கள் தற்போது ரீ ரிலீஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

Vijay

இந்நிலையில், நாளை அதாவது ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இதனால் இவரது ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கில் இவரது நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று விஜய் நடிப்பில் வெளியான 6 படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. அதில், துப்பாக்கி, கத்தி, போக்கிரி, மெர்சல், மாஸ்டர் மற்றும் கில்லி படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Vijay

ட்ரெண்டாகும் வீடியோக்கள்: இந்நிலையில் துப்பாக்கி படத்தின் இண்டர்வெல் காட்சியான 12 ஸ்லீப்பர் செல்களைக் கொல்லும் காட்சிக்கு விஜய் ரசிகர்கள் திரையரங்கில் ஆரவாரம் செய்துள்ளனர். அதேபோல் ஐ அம் வெய்ட்டிங் காட்சிக்கும் திரையரங்கமே அதிரும் அளவிற்கு கொண்ட்டாடியுள்ளனர். கூகுள் கூகுள் பாடலுக்கு ரசிகர்கள் தியேட்டரில் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Vijay

பிறந்த நாள் கொண்ட்டாட்டம் வேண்டாம்: நாளை தனது 50வது பிறந்தநாளை விஜய் ரசிகர்களும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழ்நாட்டையே உலுக்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Vijay

உத்தரவு: இந்த உத்தரவை த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டார். அதில், "தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய் உத்தரவு! தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார். எனவே தலைவரின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X