Vijay: மீண்டும் சனிக்கிழமையா? சூடு பிடிக்க தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் விஜய்.. தேதி குறிச்சாச்சு!

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக வரும் 28ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பிரசாரம் செய்ய அவருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2024ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது என்றாலும் அவரது கட்சி முதன் முதலாக சந்திக்கவுள்ள தேர்தல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026 தான். இந்த தேர்தலுக்காக கடந்த ஆண்டில் இருந்தே விஜய் தனது ரசிகர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரையும் சந்தித்து ஊக்கப்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்.

இடையில் நடந்த கரூர் பெருந்துயரத்திற்குப் பிறகு நான்கு மாதங்களுக்குப் பின்னர் தான் மீண்டும் தனது கட்சியினரைச் சந்தித்தார். இப்படி இருக்கும் போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக தேர்தல் அறிக்கை தயார் செய்வதில் தொடங்கி, வேட்பாளர்களை தேர்வு செய்வது வரை என முழுக்க முழுக்க அவரது கண் பார்வையில் தான் நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

Actor Vijay to Campaign Starts March 28 Across Tamil Nadu Ahead of 2026 Assembly Elections
Photo Credit:

இப்படி இருக்கையில் நடிகர் விஜய் வரும் 28ஆம் தேதி அதாவது வரும் வாரத்தின் சனிக்கிழமை சென்னை பெரம்பூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கி இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

பிரசார பிளான் : அதேபோல் வரும் 28ஆம் தேதி சென்னையில் தொடங்கும் பிரசாரமானது, ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி கன்னியாகுமரி வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மொத்ததில் இந்த ஒரு மாத காலத்தில் நடிகர் விஜய் தீவிரமாக பிரசாரம் செய்யவுள்ளார் என்பதால், அவரது கட்சியினர் மிகவும் உற்சாகமாக உள்ளனர். அதே நேரத்தில் சிலர் மீண்டும் சனிக்கிழமையே விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளாரா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

பெரம்பூரில் போட்டியா?: அதேபோல் நடிகர் விஜய் சென்னை பெரம்பூரில் போட்டியிடவுள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்தது. மேலும் பெரம்பூர் மட்டுமல்லாமல் வேறு ஒரு மற்றொரு தொகுதியிலும் போட்டியிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் மிக விரைவாகவே தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவை மிக விரைவாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X