நடிகர் விஜய் புதிய நியூஸ் சேனல் தொடங்குகிறாரா? இணையத்தில் கசிந்த தகவல்!
சென்னை: நடிகர் விஜய் புதியதாக நியூஸ் சேனல் தொடங்கி இருப்பதாக வெளியாகி உள்ள செய்திக்கு அவர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அக்டோபர் மாதம் 19ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

தளபதி விஜய்: லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரியங்கா மோகன் அவருக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்
நா ரெடி தான் வரவா: கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், லியோ படத்திலிருந்து வெளியான நா ரெடி தான் வரவா பாடலை விஜய் அரசியல் என்ட்ரீக்கான பாடல் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். அது உண்மை என்பது போல, அம்பேத்கர் பிறந்த நாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விஜய் மக்கள் இயக்கம்: மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய், கல்வி உதவி தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அண்மையில் பனையூரில், விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புது நியூஸ் சேனல்: இந்த நிகழ்ச்சி யூடியூப் சேனலில ஒளிபரப்பப்பட்ட நிலையில், நடிகர் விஜய் புதிதாக நியூஸ் சேனல் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் உண்மை இல்லை என்றும், நியூஸ் சேனல் தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











