விஜய் காசு கொடுக்கலனு உங்களுக்குத் தெரியுமா? செய்தியாளரிடம் கடுகடுத்த புஸ்ஸி அனந்த்!
சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வீடு இல்லாத மக்களுக்கு விலையில்லா வீடுகள் கட்டித்தரப்பட்டு வருகின்றது. இந்த வீடுகள் கட்ட ரசிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு விஜய் பெயர் வைப்பது சரியா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு விஜய் பணம் கொடுக்கவில்லை என உங்களுக்குத் தெரியுமா என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலக முடிவெடுத்து தனது கடைசி இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார். இந்த படத்திற்குப் பின்னர் விஜய் தனது கடைசி படத்தில் நடிக்கின்றார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது ரசிகர் மன்றத்தினை அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். ரசிகர் மன்றமாக இருந்தபோதே பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வந்துள்ளனர். குறிப்பாக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இலவச வீடுகள்: இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வீடில்லா பழங்குடியினருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 வீடுகள் கட்டதிட்டமிடப்பட்டு அதில் இரண்டு வீடுகளின் பணி நிறைவடைந்ததால் அந்த இரண்டு வீடுகளையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி, பயனாளிகளுக்கு வீட்டுக்குத் தேவையான அடுப்பு, மிக்சி, கிரைண்டர், எரிவாயு சிலிண்டர், அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
கேள்வி: அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் விலையில்லா வீடு திட்டத்தின் சார்பாக வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். செய்தியாளர் தரப்பில் இருந்து, விஜய் ரசிகர்களிடம் பணம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு விஜய் பெயரை வைத்திருப்பது என்பது எந்தவகையில் சரி என கேள்வி எழுப்பப்பட்டது.
கோபப்பட்ட ஆனந்த்: அதற்கு புஸ்ஸி ஆனந்த், ' விஜய் பணம் கொடுத்தாரா இல்லையா என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? என சற்றே கோபத்துடன் இரண்டு முறை கேட்டார். அப்போது அவருடன் இருந்த தவெக நிர்வாகிகள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான வேலைகள் தீவிரமாக கட்சியினர் மத்தியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த மாநாடு முடிந்த பின்னர்தான் தி கோட் படத்தின் ரிலீஸ் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











