விஜய்யின் "பீஸ்ட்" பட டைட்டிலில் இப்படியொரு விஷயம் இருக்கா... படக்குழு வைத்த ட்விஸ்ட்!
சென்னை : நடிகர் விஜய்யின் 65-வது திரைப்படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இணையதளத்தை திணறடித்தன.
இந்த நிலையில் பீஸ்ட் பட டைட்டிலில் படக்குழு வைத்த செம ட்விஸ்ட் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

இயக்குனர் நெல்சன்
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் தற்போது விஜய்யின் 65 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. புட்டபொம்மா பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
அதிரடி ஆக்சன் கதைக்களத்தைக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் விஜய்யின் நாளை முன்னிட்டு நேற்று படக்குழு வெளியிட்ட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தை தாறுமாறு செய்தது.

பெரிய துப்பாக்கியை ஏந்தி
சன் பிக்சர்ஸ் சொன்னபடியே முதல் போஸ்டர் வெளியானது. பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்டு விஜய் முண்டா பனியனுடன் கையில் பெரிய துப்பாக்கியை ஏந்திக்கொண்டு புகை மண்டலம் சூழ ஸ்டைலாக நிற்கிறார். போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே இந்திய அளவில் ட்ரெண்டானது. முதல் போஸ்டரை தொடர்ந்து சர்ப்ரைஸாக மற்றுமொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு தாறுமாறு செய்திருந்தது.

புல்லட்டை வாயில்
அதில் விஜய் பிளாக் பேண்ட் ஒயிட் ஷர்ட்டில் ஸ்டைலான கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு புல்லட்டை வாயில் வைத்துக்கொண்டு கையில் கண்ணை வைத்து அமுக்குகிறார். இந்த போஸ்டரும் வேற லெவலில் கொண்டாடப்பட்டு வைரலானது.

விஜய்யின் வயது வரும்
இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு விஜய் பிறந்தநாளை சிறப்பித்த படக்குழு பீஸ்ட் டைட்டிலில் மற்றுமொரு ட்விஸ்ட்டையும் வைத்திருந்தது. நேற்று விஜய் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடியதை குறிப்பிடும் வகையில் பீஸ்ட் என்ற வார்த்தையை ABCD வரிசையில் எண்களைப் போட்டு கூட்டினால் 47 என வரும். B(2)+E(5)+A(1)+S(19)+T(20)= 47 என விஜய்யின் வயது வருகிறது. யாரும் எதிர்பார்த்திராத இந்த ட்விஸ்ட்டை வாவ் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











