த்ரிஷாவுடன் போட்டோ எடுத்த பிறகு என்ன ஆனது?.. லியோ கடைசி நாளில் சட்டென விஜய் கிளம்பிப் போயிட்டாராம்!

சென்னை: கால் கடுக்க 13 நேரத்திற்கு மேல் மாணவர்களுக்காக நின்று போட்டோ எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் லியோ படத்தின் கடைசி நாளில் குரூப் போட்டோ எடுத்துக் கொள்ளாமல் சட்டென கிளம்பிப் போய் விட்டார் என பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது. தனது போர்ஷனை முன்கூட்டியே முடித்த விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் ஹேப்பியாக போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகின.

இந்நிலையில், விஜய் இல்லாத போர்ஷன் காட்சிகள் முடிந்து மொத்த ஷூட்டிங்கும் ஓவரான நிலையில், குரூப் போட்டோஷூட்டுக்கு தயாரிப்பு தரப்பு ஏற்பாடு செய்திருக்கிறது.

Actor Vijay upset on last day shoot of Leo talks trending on K Town

ஆரம்பத்தில் இருந்தே அலப்பறை: லியோ படத்தை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து வரும் நிலையில், படத்தின் பூஜை முதல் காஷ்மீருக்காக தனி விமானத்தில் படக்குழுவுடன் சென்றது, காஷ்மீரில் 50 நாட்கள் ஷூட்டிங் முடிந்து திரும்பி வந்தது, அங்கே பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் வீடியோவாகவும் போட்டோவாகவும் வெளியிட்டு அலப்பறை செய்திருந்தனர்.

ஆனால், அடுத்த 60 நாள் ஷூட்டிங் முடிந்த நிலையில், லியோ படத்தின் பேச்சுக்கள் அப்படியே அடங்கிப் போனது போல அமைதியாக காணப்படுகிறது.

Actor Vijay upset on last day shoot of Leo talks trending on K Town

த்ரிஷாவுடன் போட்டோ: கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி படங்களை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் த்ரிஷா மீண்டும் லியோ படத்தில் 5வது முறையாக இணைந்துள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து த்ரிஷா மற்றும் படக்குழுவினருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விஜய்யை அழைத்துள்ளனர். நடிகர் விஜய்யும் வந்து த்ரிஷாவுடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டு கிளம்பலாம் என பார்த்தால், படக்குழுவினருடன் க்ரூப் போட்டோ என்கிற பேரில் கிட்டத்தட்ட ஆயிரக் கணக்கில் ஆட்கள் அலைமோதி விட்டனராம்.

Actor Vijay upset on last day shoot of Leo talks trending on K Town

சட்டென கிளம்பிய விஜய்: இந்த கூட்டத்தில் எல்லாம் நின்று என்னால் போஸ் கொடுக்க முடியாதுங்க, நீங்க இதை எங்கிட்ட கமிட்டே பண்ணல என தயாரிப்பு தரப்பிடம் சொல்லிவிட்டே நடிகர் விஜய் புறப்பட்டு சென்று விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மேலும், தளபதி 68 படத்தை ஆரம்பிக்க விடாமல் லலித் கட்டையை போட்டு வருகிறார் என்பதால், அவர் மீதும் நடிகர் விஜய் கோபத்தில் இருப்பதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X