கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விஜய்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் விஜய் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான நாட்கள் லாக்டவுனிலேயே கழிந்து விட்டது.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள்.

சினிமா பிரபலங்கள் மரணம்
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் பாரபட்சமின்றி கொரோனா தாக்குதலுக்கு ஆளானார்கள். தமிழ் சினிமா கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பிரபலங்களை இழந்துள்ளது.

தமிழக அரசு தடுப்பூசி
இந்நிலையில் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாள் தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசி போட்டு வருகிறது.

தடுப்பூசி போடும் போட்டோ
சினிமா பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களையும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் நடிகைகள் தடுப்பூசி
அந்த வகையில் நடிகர்கள் ரஜினி, கமல், ஆர்யா, யோகி பாபு, சூர்யா நடிகைகள் ஜோதிகா, ஜனனி ஐயர், நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், நதியா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன் என பலரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
Recommended Video

தடுப்பூசி போட்ட விஜய்?
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

விரைவில் போட்டோ?
நடிகர் விஜய் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் போட்டோக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அவரது ரசிகர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











