Tamannaah - தமன்னாவுடன் திருமணம் எப்போது?.. கேள்விக்கு பதிலளிக்க மறுத்த விஜய்.. ஒருவேளை அதுவா இருக்குமோ

மும்பை: Tamannaah (தமன்னா) தமன்னாவுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகர் விஜய் வர்மா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு கல்லூரி, வியாபாரி படங்களில் நடித்து பிரபலமான அவர் தொடர்ந்துகோல்விஉட்டில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

Actor Vijay Varma refused to answer the question of when he will marry Tamannaah

பாலிவுட் என்ட்ரி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

காவாலா ட்ரெண்டிங்: பாலிவுட்டில் பக்கம் ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார்.

காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேருமே சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தனர். ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேசமயம் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி இரு வீட்டார் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது.

பதிலளிக்க மறுப்பு: இந்நிலையில் சமீபத்தில் விஜய் வர்மாவிடம் செய்தியாளர்கள் தமன்னாவுடன் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ, 'இதற்கு பதிலளிக்க முடியாது’ என ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் விஜய் வர்மா பதிலளிக்க மறுக்கிறார். ஒருவேளை இரண்டு பேருக்கும் இடையே ஊடல் எதுவும் ஆரம்பித்துவிட்டதோ என சந்தேகத்தை கிளப்பிவருகின்றனர்.

தமன்னா விளக்கம்: இதற்கிடையே சமீபத்தில் தமன்னாவிடமும் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவரோ, திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்கு நான் இன்னும் தயாராகவில்லை என்று நினைக்கிறேன். தயாராகிவிட்டேன் என்று உணர்ந்த பிறகு திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X