twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் நாளாவே இந்த நடிகர காணோமே.. காரணம் தெரியுமா.. இங்க பாருங்க.. அதிர்ச்சி தகவல்!

    By Staff
    |

    சென்னை: பல தடைகளை தாண்டி மை டியர் லிசா படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என நடிகர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    விஜய் வசந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகர். தன் அப்பா ஒரு மிகப் பெரிய தொழிலதிபராக இருந்தாலும். தன் நடிப்பின் மூலம் சினிமாவில் உயர்ந்து வரும் ஒரு நடிகர்.

    Actor Vijay Vasanth met an accident while shooting.

    இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பரான இவர், அவர் இயக்கிய முதல் திரைப்படமான சென்னை 28 படத்தில் நடித்தார். இதன் பின் அதே இயக்குனரின் இரண்டாவது படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சசிகுமார் நடித்து சமுத்திரக்கனி இயக்கி பலரால் பாராட்டப்பட்ட நாடோடிகள் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் வசந்த். இந்தக் கதாப்பாத்திரம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

    வெங்கட் பிரபு படமென்றால் அதில் விஜய் வசந்த் கண்டிப்பாக இருப்பார். பல வெங்கட் பிரபு படத்தில் சிறு வேடத்தில் வந்து நடித்து இருப்பார். விஜய் நடித்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

    பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். இவருக்கு ஒர் திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்கள் சென்னை 28 இரண்டாம் பாகம், அச்சமின்றி, வேலைகாரன். அச்சமின்றி திரைப்படம் விமர்சன ரிதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    தற்போது அவர் நடித்து வரும் திரைப்படம் மை டியர் லீசா. இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு வசந்த் விஜய் மகிழ்ச்சியடைந்துள்ளார். பல தடைகளை தாண்டி படத்தின் போஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக கூறியுள்ளார் விஜய் வசந்த்.

    English summary
    Actor Vijay Vasanth met an accident during his film my dear lisa after long struggle now the movie is going to be release soon.Now he mentioned that in his official twitter page and witnesse the My dear lisa motion poster for this pongal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X