மிஸ் யூ அப்பா.. கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதர்.. நடிகர் விஜய் வசந்த் உருக்கம்!
சென்னை: தனது தந்தையான எம்பி வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் அவரது மகனான நடிகர் விஜய் வசந்த் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விஜய் வசந்த் நாடோடிகள், சென்னை 28 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் காங்கிரஸ் எம்பியும் வசந்த் அன்ட் கோ நிறுவனர் வசந்தகுமாரின் மகனும் ஆவார்.
இந்நிலையில் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பலரும் இரங்கல்
சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அஞ்சலி
சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வசந்த குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வசந்த் அன்ட் கோ மற்றும் அவர்களின் குடும்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

சொந்த ஊரில் அடக்கம்
அதன்பின்னர் சனிக்கிழமை காலை வசந்தகுமாரின் உடல் காமராஜர் அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது பெற்றோர் நினைவிடத்திற்கு அருகிலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மிஸ் யூ அப்பா..
இந்நிலையில் அவரது மகனான நடிகர் விஜய் வசந்த், அவரது அப்பா குறித்து டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி என கூறியுள்ளார். மிஸ் யூ டாட் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











