Vijay: ஷாருக்கான்.. கமலை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் போகும் விஜய்.. எதுக்கு தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்தப் படம் ஏற்படுத்திய ஃபீவரை காட்டிலும் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையவுள்ள தளபதி 68 படம் அதிகமாக ஏற்படுத்தி வருகிறது.

Actor Vijay, Venkat prabhu and team to go to Los Angels for Look test

தளபதி 68 படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாருக்கான், கமலை தொடர்ந்து லுக் டெஸ்ட்டிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போகும் விஜய்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனரகாஜ். இந்தப் படத்தின்மூலம் விஜய் -லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. வாரிசு படத்தை தொடர்ந்து வெளியாகவுள்ள லியோ படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக வெளியான படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் போன்றவையும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் அர்ஜூன், சஞ்சய் தத் போன்றவர்களின் பிறந்தநாளையொட்டி வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோக்களும் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்களை மரண மாஸாக வெயிட் செய்ய வைத்துள்ளது.

லியோ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ளார் விஜய். படத்தின் இசை வெளியீட்டையொட்டி அவர் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசிற்கு பிறகு துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க்கை முடித்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, அடுத்தடுத்த வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார். தற்போது படத்தின் நடிகர், நடிகைகளை இறுதி செய்யும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. படத்தில் ஜெய், பிரபு தேவா, அபர்ணா தாஸ் போன்றவர்கள் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடிகளாக ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் தளபதி 68 படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் இளைஞர் மற்றும் வயதானவர் தோற்றத்திற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சல்சிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு 3D VFX Scan எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த டெஸ்ட்டை ஷாருக்கான் மற்றும் கமல்ஹாசன் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Vijay, Venkat prabhu and team to go to Los Angels for Look test

மிகவும் பிரம்மாண்டமான அளவில் விஜய்யின் தளபதி 68 படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்காக விஜய்க்கு மட்டுமே 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னதாகவே படத்திற்கான வியாபாரம் சூடு பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X