Thalapathy 68: அக்டோபர் 1ம் தேதி பூஜை.. தளபதி 68 படத்தோட சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68ல் இயக்குநர் வெங்கட் பிரபு டைரக்ஷனில் இணையவுள்ளார் நடிகர் விஜய்.

Actor Vijay -Venkat Prabhu Combination Thalapathy 68 movie shooting to be planned from October 1st

இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான லுக் டெஸ்ட்டிற்காக சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார் விஜய்.

அக்டோபர் 1ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள தளபதி 68 படத்தின் பூஜை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் இவர்களது கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. முதல் படமான மாஸ்டர் படத்திலும் வித்தியாசமான விஜய்யை காட்சிப்படுத்தியிருந்தார் லோகேஷ். கெட்டப்பழக்கங்களுடன் ஹீரோ, கெட்டப்பழக்கங்கள் இல்லாத வில்லன் என இந்தப்படத்தின் கதையை விஜய்யை வைத்து தைரியமாக உருவாக்கியிருந்தார் லோகேஷ்.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படம் 100 சதவிகிதம் தன்னுடைய படமாக இருக்கும் என்று முன்னதாக லோகேஷ் அறிவித்துள்ள நிலையில், இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் அடுத்தமாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் விஜய் நடிக்கவுள்ளதும் படத்தின் எதிர்பார்ப்புகளை அதிகமாக எகிற செய்துள்ளது.

படத்தின் பாடல், க்ளிம்ப்ஸ் வீடியோக்கள், போஸ்டர்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் சூட்டிங் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் அதிகமான ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வெங்கட் பிரபு அதிகமாக காமெடி, கலாட்டாக்கள் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் அஜித்தை வைத்து அவர் கொடுத்திருந்த மங்காத்தா படம் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினராக அமைந்தது. சூர்யா, கார்த்தி என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு. அவரிடம் மன்மத லீலை போன்ற படங்களையும் மாஸ் என்டர்டெயின்மெண்ட் படங்களை பார்க்க முடிவதுதான் சிறப்பு. இந்நிலையில் அடுத்ததாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுததியுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்தில் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அக்டோபர் 1ம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை சென்னையில் கிராண்டாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த நாளிலேயே படத்தின் சூட்டிங்கும் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், அப்பா கேரக்டருக்கு ஜோதிகா நாயகியாகவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது அந்தக் கேரக்டரில் சிம்ரன் அல்லது சினேகா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மகன் கேரக்டருக்கு பிரியங்கா மோகன் ஜோடியாகவுள்ளார். படத்தின் சூட்டிங் அதிகமான அளவில் சென்னையில் எடுக்கப்பட உள்ளதாகவும் பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் வெங்கட் பிரபு ஸ்டைலில் மாஸ் எண்டர்டெயினராக உருவாகவுள்ளதாகவும் விஜய்யை இந்தப் படம் வித்தியாசமாக காட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X