அந்த பிக் பாஸ் பிரபலத்துக்காக தளபதி விஜய் செய்யும் சூப்பர் விஷயம்.. அப்போ இந்த சீசன் டைட்டில்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டில் கடைசியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அந்த பிரபலத்துக்கு கிடைத்து விடுமோ என்கிற திடீர் சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 5 11 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வைல்டு கார்டு என்ட்ரியாக சில வாரங்களுக்கு முன்னதாக தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

வைல்டு கார்டு என்ட்ரி
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் வைல்டு கார்டு என்ட்ரியாக அபிஷேக் ராஜா, சஞ்சீவ் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அபிஷேக் ராஜா இரண்டாவது வாரத்திலேயே எலிமினேட் ஆகி மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து வந்த வேகத்திலேயே எலிமினேட் ஆனார்.

தூக்கி வீசப்படுவார்
இன்னொரு வைல்டு கார்டான அமீர் பாவனி பின்னாடி சென்று முத்தம் எல்லாம் கொடுத்து எப்போ நாமினேஷனுக்கு வந்தாலும் தூக்கி வீசப்படும் நிலையில் உள்ளார். ஆனால், இந்த வாரமும் அமீர் எஸ்கேப் ஆனதால் பாவனி பலி கடா ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலக்கும் சஞ்சீவ்
வைல்டு கார்டாக வந்த போட்டியாளர்களிலேயே சஞ்சீவ் வேற லெவலில் சவுண்ட் பார்ட்டியாக இருந்து சரியான இடங்களில் சரியான வாதங்களை தவறாமல் எடுத்து வைத்து கெத்துக் காட்டி வருகிறார். தளபதி விஜய்யின் நண்பர் என்பதால் தளபதி ரசிகர்கள் ஆதரவும் சஞ்சீவுக்கு அதிகளவில் உள்ளன.
சஞ்சீவ் மனைவி பேட்டி
நடிகையும் சஞ்சீவ் மனைவியுமான ப்ரீத்தி பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் தளத்துக்கு அளித்த பேட்டியின் வீடியோவை நடிகர் சஞ்சீவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். அதில், சஞ்சீவ் பற்றியும் நடிகர் விஜய் பற்றியும் அவர் பேசிய ஒரு முக்கியமான விஷயம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் ஓட்டு யாருக்கு
பிக் பாஸ் வீட்டுக்கு சஞ்சீவ் போனதில் இருந்தே தினமும் ஒரு மெசேஜ் அல்லது போன் கால் தளபதி விஜய் மற்றும் சஞ்சீவின் நண்பர்களிடம் இருந்து வந்து விடுமாம். மேலும், ஓட்டு போடுங்க என எல்லோருக்கும் ஃபார்வர்டு பண்ணுவது போல விஜய்க்கும் மெசேஜ் ஃபார்வர்ட் பண்ணேன். உடனடியாக தளபதி விஜய் நான் ஓட்டு போடுறேன் என ரிப்ளை பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்தது எனக் கூறியுள்ளார்.

டைட்டில் கிடைக்குமா?
தளபதி விஜய் சஞ்சீவுக்கு ஓட்டுப் போடுகிறார் என பேட்டியில் பேசி கணவருக்காக சூப்பராக ஓட்டு சேகரித்து வருகிறார் ப்ரீத்தி. ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களும் சஞ்சீவுக்கு ஆதரவாக ஓட்டுக்களை போட்டு டைட்டில் வின்னராக அவரை ஆக்கி விடுவார்களா? என்கிற சந்தேகமும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டில் பர்ஃபார்ம் பண்ணுவதை வைத்துத் தான் ஓட்டுக்கள் வரும் என்பது நிச்சயம்.


Click it and Unblock the Notifications











