அஜித்துக்கு வில்லன் நான்தான் என விஜய் என்னிடம் கூறினார்!

சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே வித்தியாசமாக இருக்கும் அத்தனையும் அனைவருக்கும் பிடிக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது

அடுத்ததாக மன்மதலீலை என்ற படத்தை இயக்கியுள்ள வெங்கட் பிரபுவிடம் விஜய் அஜித்துக்கு வில்லனாக நான்தான் நடிப்பேன் என கூறினாராம்.

மங்காத்தா

மங்காத்தா

சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு அதற்கு முன்பாகவே பல படங்களில் ஹீரோவாகவும் நண்பர்கள் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் இந்த நிலையில் சென்னை 600028 மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தொடர்ந்து இயக்குனராக பயணித்துக் கொண்டு உள்ளார். சென்னை 600028 தொடர்ந்து சரோஜா, கோவா என இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை வெங்கட்பிரபு இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்.

அஜித் 50வது படம்

அஜித் 50வது படம்

அஜித்தின் மிரட்டலான நடிப்பில் 50வது படமாக வெளியான மங்காத்தா பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது. அதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்திருந்தது. முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. மங்காத்தா வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபுவும் முன்னணி இயக்குனர் இடத்தை பிடித்தார்.

விஜய் பாராட்டு

விஜய் பாராட்டு

இந்த நிலையில் மங்காத்தா படப்பிடிப்பில் இருந்தபோது அஜித் மற்றும் விஜய் ஒன்றாக சந்தித்து கொண்டனர். நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டியாளராக கருதப்படும் நிலையில் நிஜ வாழ்க்கையில் இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மங்காத்தா பார்த்த விஜய் படக்குழுவை பாராட்டியும் இருந்தார்

அஜித்துக்கு வில்லன் நான்தான்

அஜித்துக்கு வில்லன் நான்தான்

அப்படி ஒருநாள் அஜித் வெங்கட் பிரபு விஜய் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் வெங்கட் பிரபு உங்க இரண்டு பேரையும் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசையாக உள்ளது என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது விஜய் உடனடியாக ஓ பண்ணலாமே அப்போ அஜித்துக்கு வில்லனாக நான் தான் நடிப்பேன் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் மாஸ்டர் ப்ளான்

வெங்கட் பிரபுவின் மாஸ்டர் ப்ளான்

பின் அஜித் இல்லை இல்லை நான் தான் வில்லனாக நடிப்பேன் என இருவரும் மாறி மாறி வில்லனாக நடிக்க வேண்டும் என தங்களது விருப்பத்தை வெங்கட் பிரபுவிடம் தெரிவித்ததாக நேர்காணல் ஒன்றில் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார். எது எப்படியோ அஜித் மற்றும் விஜய் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் அந்த தருணத்தை ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X