Vijay: தளபதி 68 படத்தில் இரட்டை வேடம்.. விஜய் இம்ப்ரஸ் ஆன விஷயம் எது தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், லியோ ஃபீவர் ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
படம் ரிலீசாக இன்னும் 37 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷனுக்காக படக்குழுவினர் மிகப்பெரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே தளபதி 68 படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 68 படத்தில் விஜய் இம்ப்ரஸ் ஆக காரணம்: நடிகர் விஜய், த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ள படம் லியோ. இந்தப் படத்தில் இவர்களுடன் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் இறுதிக்கட்ட சூட்டிங்கில் இணைந்திருந்தார். எப்போதுமே தன்னுடைய படங்களில் அதிகமான நட்சத்திரங்களை கொண்டு படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ், லியோ படத்திலும் அதே யுத்தியைதான் பயன்படுத்தியுள்ளார்.
சிறு சிறு வேடங்களில் இந்தப் படத்தில் அதிகமான கலைஞர்கள் நடித்துள்ளனர். இன்னும் 37 நாட்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது லியோ படம். இந்தப் படத்தின் துவக்கத்திலிருந்தே படத்திற்கான ப்ரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டன. முதலிலேயே படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதால், தளபதி 67 என்று கூறாமல் நேரடியாக லியோ என்றே ரசிகர்கள் படத்தின் பெயரை உச்சரிக்கும் சூழலை படக்குழுவினர் ஏற்படுத்தினர். இதுவும் படத்தின் ப்ரமோஷனுக்கு அதிகமாக உதவியது.
தொடர்ந்து படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ஃபர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. இந்தப் படத்தின் இசை வெளியீடு இந்த மாதத்தின் இறுதியில் தமிழகத்தில் நடக்கவுள்ளது. ஆனால் இன்னும் இடம் முடிவாகாத நிலையில் சென்னையில் நடக்கவே அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்தின் ட்ரெயிலரிலும் படத்தின் கதையை யூகிக்க முடியாத வகையில் அதை திட்டமிட்டு வருகிறார் லோகேஷ். படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், சில தினங்களிலேயே தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் விஜய் இணையவுள்ளார். வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த விஜய் தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், லியோ மற்றும் தளபதி 68 படத்தின் வேலைகள் வேகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவை விஜய் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இரண்டு விதமான கதைகளை வெங்கட் பிரபு கூறிய நிலையில், அதில் ஒன்றைதான் விஜய் தேர்ந்தெடுத்துள்ளார். தளபதி 68 படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளார். இதற்கான லுக் டெஸ்ட் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. அப்பா -மகன் என்ற இருவேறு கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், இவர்களுக்குள் காம்பினேஷன் காட்சிகளே கிடையாதாம். இதை சொல்லித்தான் வெங்கட் பிரபு விஜய்யை இம்ப்ரஸ் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கவுள்ள நிலையில், படத்தில் ஜெய், பிரஷாந்த், பிரபுதேவா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ள நிலையில், சூட்டிங் துவங்கிய சில தினங்களிலேயே படத்தின் டைட்டிலையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மங்காத்தா, மாநாடு, மன்மதலீலை என அடுத்தடுத்து மா வரிசை படங்களை இயக்கியுள்ள வெங்கட் பிரபு அந்த சென்டிமெண்டையொட்டி இந்தப் படத்தின் முதலெழுத்து மா என தொடங்கும் வகையில் டைட்டிலை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











