திருமண விழாவிற்கு வாரிசு ஸ்டைலில் வந்த விஜய்...இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!
சென்னை : மணிப்பூர் நீதிபதியின் இல்லத் திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் டிராண்டாகி வருகிறது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படத்தில் வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப சென்டிமெண்ட் கொண்ட இந்த படத்தில் விஜய் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மத்தானா நடித்துள்ளார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய லீட் ரோலில் நடித்துள்ளனர்.

வாரிசு படத்தில்
பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும் வாரிசு படத்தில் இருந்து 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

திருமணவிழாவில் விஜய்
இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை அடையாறில் நடைபெற்ற மணிப்பூர் நீதிபதியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவிற்காக அவர் கையில் பூங்கொத்துடன், வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிறத்தில் பேண்ட் அணிந்து,வாரிசு ஸ்டைலில் திருமண விழாவிற்கு வந்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 67
இந்த போட்டோவை ஜூம் போட்டு பார்த்த ரசிகர்கள், விஜய்யின் கையில் வெள்ளி வளையலை பார்த்து மாஸ்டர் நினைவுகளை அசைபோட்டுள்ளனர். அதாவது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், நடிகர் விஜய்யின் நினைவாக விஜய் போட்டிருந்த வளையலை லோகேஷ் கனகராஜ் வாங்கி வைத்துக்கொண்டார். தற்போது, இருவரும் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளதால், விஜய்க்கு வளையலைத் திருப்பிக் கொடுத்துவிட்டாரா என கேட்டு வருகின்றனர்.

விஜய் கேங்ஸ்டரா?
மேலும், தளபதி 67 திரைப்படம் ஒரு பான் இந்திய ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் கேங்ஸ்டடராக நடிக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்டவர்களும் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











