Vijay: முழுமையாக லியோ படத்தை பார்த்த தளபதி.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் இன்னும் ஒரு மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தின் இசை வெளியீடு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இன்னும் இடம் குறித்து இறுதி செய்யப்படவில்லை என்று தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vijay watched Leo movie and expressed happiness about the movie

லியோ படத்தை முழுமையாக பார்த்த விஜய்: நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியானது. இந்தப் படத்தில் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து வம்சி பைடிப்பள்ளி திரைக்கதையை உருவாக்கியிருந்தார். படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கேங்ஸ்டர் கதைக்களத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

முன்னதாக இந்தக் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை படக்குழு முடுக்கி விட்டுள்ளது. இந்த மாத இறுதியில் படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியாகவுள்ளது.

அனிருத் இசையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரீல்ஸ்களை செய்து வெளியிட்டு வருகின்றனர். ரசிகர்களை வெகுவாக கவர்ந்து யூடியூபிலும் இந்தப் பாடல் ட்ரெண்டானது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள இரண்டாவது பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

படத்தில் மொத்தமே இரு பாடல்கள்தான் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது பாடல், விஜய் மற்றும் த்ரிஷாவின் ரொமாண்டிக் பாடலாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி வெளியான ப்ரமோக்களும் அதிரடி கிளப்பியுள்ளன.

Actor Vijay watched Leo movie and expressed happiness about the movie

இந்நிலையில், படத்தின் அடுத்தடுத்த ப்ரமோக்களை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாதியை தான் பார்த்துள்ளதாகவும் மிகச்சிறப்பாக வந்துள்ளதாகவும் முன்னதாக பேட்டியொன்றில் பேசிய தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய வெளிநாட்டு சுற்றுலா கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார் நடிகர் விஜய்.

இதனிடையே, தற்போது அவர் லியோ படத்தை முழுமையாக பார்த்துள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு லியோ படம் மிகவும் பிடித்துள்ளதாகவும் சூப்பரா இருக்கு என்று அவர் கூறியதாகவும் தற்போது படத்தில் நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களும் மிகுந்த குஷியில் உள்ளனர். படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடித்துள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X