twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த படத்திற்கு தயாராகும் நடிகர் விஜய்.. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பார்த்தாரா? பரபர தகவல்!

    |

    சென்னை: நடிகர் விஜய் தனது அடுத்தப்படத்திற்கு தயாராகி வரும் நிலையில் அவர் சூரரை போற்று படத்தை பார்த்தாரா இல்லையா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்தார். கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    அதனை தொடர்ந்து மாநகரம் மற்றும் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தற்போது மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது.

    கதை கேட்கும் விஜய்

    கதை கேட்கும் விஜய்

    இந்தப் படம் வரும் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது அடுத்தப்படத்தில் நடிக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக முன்னணி இயக்குநர்கள் பலரிடமும் கதைக் கேட்டு வருகிறார் நடிகர் விஜய். ஆனால் அவருக்கு எந்த கதையும் திருப்தியளிக்கவில்லையாம்.

    சுதா கொங்கரா

    சுதா கொங்கரா

    இந்நிலையில் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கராவின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இயக்குநர் சுதா கொங்கராவிடம் அவர் கதை கேட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சுதா கொங்கரா கூறிய கதை விஜய்க்கு பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய்க்கு பிடித்துவிட்டது

    விஜய்க்கு பிடித்துவிட்டது

    ஏற்கனவே சூரரைப் போற்று படத்தை நடிகர் விஜய் பார்க்க விரும்புவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய், சூரரைப் போற்று படத்தை பார்த்ததாகவும் அதில் சுதா கொங்கராவின் டெக்னிக்ஸ் விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

    விரைவில் அறிவிப்பு

    விரைவில் அறிவிப்பு

    இந்நிலையில் நடிகர் விஜயும் இயக்குநர் சுதா கொங்கராவும் படம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் படமும் சூரரை போற்று படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகவுள்ளது.

    இரண்டாவது முறை

    இரண்டாவது முறை

    ஒரு வேளை நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் சுதா கொங்கராவுடன் கைகோர்த்தால், 'மாஸ்டர்' படத்திற்காக 'கைதி' இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த பிறகு, விஜய் தன்னுடன் போட்டியிடும் திரைப்பட இயக்குனருடன் இணைவது இது இரண்டாவது முறையாகும். பிகில் படத்துக்கு போட்டியாக வெளியான கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்ததை போன்று மாஸ்டர் படத்திற்கு போட்டியாக வெளியாகும் சூரரைப்போற்று இயக்குநருடன் விஜய் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Vijay watched Surarai pottru movie. He will be signing in Sudha Kongura movie for his 65th film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X