மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராகப் பார்த்து ரசிக்கும் விஜய்.. வைரல் போட்டோ!
Recommended Video

சென்னை : நடிகா் விஜய் ஷட்டில் காக் விளையாடும் தனது மகளை ஓரமாக நின்று பாா்த்து ரசிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. கேரளாவிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் தன்னுடைய ரசிகை சங்கீதாவையே திருமணம் செய்துக்கொண்டார்.

முன்னணி நடிகர்
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்க்கும் மிகப்பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து திரையில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, இவர் அடுத்து எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

விஜய் குடும்பம்
விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் உள்ளனர். தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டனர். விஜயின் மகள் ஷட்டில் காக் விளையாடும் போது அதனை விஜய் ஓரத்தில் இருந்து பாா்த்து ரசிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சஞ்சய்
தனது மகன் சஞ்சய்யை வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்து திரையில் அறிமுகம் செய்திருந்தார் விஜய். தற்போது அவர் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

சாஷா திவ்யா
அதைப்போலவே மகளை 'தெறி' படத்தில் கடைசி காட்சியில் அறிமுகம் செய்து வைத்திருந்தார். அதன் பிறகு மகன் மகளை எங்கும் பெரிதாக மீடியா இருக்கும் இடத்திற்கு அழைத்து வரவில்லை விஜய்.

வைரலாகும் போட்டோ
இந்த நிலையில் சாஷா ஷட்டில் கார்க் விளையாடும் புகைப்படம் வைரலாக பரவியது. கூட்டத்தில் பலருள் ஒருவராக அமர்ந்திருந்து மகள் விளையாடுவதை கண்டு ரசித்திருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











