முழுக்க முழுக்க அரசியல்.. மீண்டும் பேரரசுவுடன் இணையும் விஜய்.. பின்னணியில் மாஸ் காரணம்!
இயக்குனர் பேரரசு உடன் நடிகர் விஜய் மீண்டும் இணைய இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
Recommended Video
சென்னை: இயக்குனர் பேரரசு உடன் நடிகர் விஜய் மீண்டும் இணைய இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் பேரரசு கூட்டணி என்பது மிகவும் வெற்றிகரமான கூட்டணி என்று கோலிவுட்டில் எல்லோருக்கும் தெரியும். காதல் படங்களில் நடித்துக் கொண்டு இருந்த விஜயை சரியாக மாஸ் படங்களை நோக்கி நகர்த்தி சென்றது பேரரசுதான்.
விஜய்க்கு இருந்த சாக்லேட் பாய் லுக்கை போக செய்து, பட்டி தொட்டி எங்கும் மாஸ் ஹீரோ விஜய் என்று பரவ செய்ததும் பேரரசுதான்.

என்ன
பேரரசு உடன் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி இரண்டு படங்களும் மாஸ் ஹிட் படங்கள். அதிலும் திருப்பாச்சி படம் விஜய்க்கு தனிப்பட்ட வகையில் பெரிய ஹிட் கொடுத்தது. அவருக்கு இதன் மூலம் நிறைய புது ரசிகர்கள் உருவானார்கள்.

இல்லை
ஆனால் பேரரசு அதன்பின் எடுத்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் விஜயை தவிர பேரரசு உடன் எந்த ஹீரோ கை கோர்த்தாலும் அந்த படம் தோல்வியில்தான் முடிந்தது. முக்கியமாக அஜித் - பேரரசு இணைந்த திருப்பதி படமும் மோசமாக தோல்வி அடைந்தது.

ஏன் சிக்கல்
வரிசையாக தோல்வியை கொடுத்த காரணத்தால், பேரரசு சில வருடங்களாக சினிமா எடுக்காமல் இருக்கிறார். ஆனால் இப்போதும் அவரிடம் நிறைய ஆக்சன் கதைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருடன் கமிட் ஆக எந்த ஹீரோக்களும் முன்வரவில்லை.

கதை சொல்லியுள்ளார்
இந்த நிலையில்தான் நடிகர் விஜய்க்கு மீண்டும் பேரரசு கதை சொல்லி இருக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் பிரச்சனைகளை மையமாக வைத்து அரசியல் கதை ஒன்றையே நடிகர் விஜய்க்கு பேரரசு சொல்லி இருக்கிறார். அதிசயமாக விஜய்க்கும் இந்த கதை பிடித்துவிட்டது.

ஏன் அப்படி
நடிகர் விஜய் இன்னும் சில வருடங்களில் அரசியலில் இறங்க வாய்ப்புள்ளது. ஆனால் விஜய் இப்போது நடிக்கும் படங்கள் எல்லாம் மாஸ் படங்களாக இருந்தாலும், பெரிதாக அவர் அரசியல் பேசுவது இல்லை. அரசியல் கதையை வைத்து வெளியான சர்கார் படம் சரியாக போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரரசு செம
இதனால் அரசியல் மற்றும் மாஸ் பின்னணி உடன் ஒரு கதை வேண்டும் என்று விஜய் காத்து இருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே தற்போது பேரரசு அரசியல் கதை சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். விஜய் 65 படம் பேரரசு இயக்க கூடிய படமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

வேறு என்ன
அதே சமயம் பேரரசு போலவே மோகன் ராஜா மற்றும் குமாரராஜா ஆகிய இயக்குனர்களும் விஜய்க்கு கதை சொல்லி உள்ளனர். விஜய் இவர்கள் இருவரின் கதையில் ஒருவரின் கதைக்கு விரைவில் டிக் அடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











