"தளபதி" ரசிகர்களுக்கு "மெர்சல்" செய்தி.. சர்வதேச விருதுகளுக்கான போட்டியில் விஜய்!
லண்டனில் நடக்கவுள்ள ஐஏஆர்ஏ விருதுக்கு நடிகர் விஜய்யின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

லண்டன்: சிறந்த நடிகர் மற்றும் உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் மெர்சல் திரைப்படத்திற்காக நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான IARA (International Achievement reccogniton awards) செப்டம்பர் 22ஆம் தேதி லண்டன் மார்ஷ் வால் பகுதியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இதில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் தலை சிறந்த ஹாலிவுட் நடிகர்களான ஸ்டார் வார்ஸ் புகழ் ஜான் போயிகா, கெட் அவுட் திரைப்பட நடிகர் டேனியல் கலூயா, ஜாமி லோமஸ்(ஹொலியோக்ஸ்) க்ரிஸ் அட்டோ(ஸ்விங்ஸ்) மற்றும் பல ஆங்கில நடிகர்களுடன் விஜய்யின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஏஜெண்ட் திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, சில்ட்ரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷுவா ஜாக்சன், சைட் சிக் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங், எல் ஹெபா எல் அவ்டா நடிகர் ஹசன் மற்றும் தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல் பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோருடன் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது.
உலகின் சிறந்த நடிகர்களுக்கான போட்டியில் இந்திய அளவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒரே நடிகர் விஜய் மட்டுமே. பாலிவுட் சினிமாவில் இருந்துகூட யாரும் தேர்வாகவில்லை. விஜய்யின் பெயர் விஜய் ஜோசப் (மெர்சல்) என்று இடம்பெற்றுள்ளது. இது மெர்சல் திரைப்படம் உலக அளவில் சென்றடைந்திருப்பதை காட்டுகிறது.
https://iara-awards.org/iara-awards-2018-nominees/
மெர்சல் திரைப்படத்திற்காக பல சோதனைகளை சந்தித்தார் விஜய். ஒருவர் எத்தனை முறை விமர்சிக்கப்பட்டாலும் உண்மையான உழைப்பு வீண்போகாது என்பதையே இந்த விருது பட்டியல் காட்டுகிறது. அவர் பட்ட கஷ்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் உலகின் சிறந்த நடிகர் என்ற விருது கிடைக்கப்பெற்றால் அதை விட பெரிய மகிழ்ச்சி விஜய் ரசிகர்களுக்கு இருக்க முடியாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் இது ரசிகர்கள் வாக்களித்து சிறந்த நடிகரை தேர்ந்தெடுப்பதுதான். அகில உலக அளவில் விஜய்க்கு எத்தனை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று உலகுக்கு எடுத்துரைக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











