வீட்டு மாடியில் சிலம்பம் சுற்றும் விஜயகுமார்.. அருண்விஜய் வெளியிட்ட வீடியோ !
சென்னை : நடிகர் விஜயகுமார் சிலம்பம் சுற்றும் வீடியோவை அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.
கொரன்டைன் நாட்கள் அனைவரின் மனதையும் சற்று சோர்வாக்கி இருக்கிறது. பலரும் இத்தனை நாட்களை வீட்டில் இருந்து இருந்து வெறுத்து போய் இருக்கின்றனர். இதனால் இதை மாற்றி அமைத்து மனநிலையை சரிபடுத்த பலரும் சில புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர் .

தற்போது நடிகர் விஜய்குமார் தன் வீட்டின் மாடியில் இருந்த படியே சிலம்பத்தை சுழற்றி தனது நேரத்தை மிக சுவாரஸ்யமாக்கி உள்ளார். இதை அவரது மகனான நடிகர் அருண்விஜய் வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதில், வீடியோவுடன் சேர்த்து சில விஷயங்களை கூறியுள்ள நடிகர் அருண்விஜய் அப்பா அவரின் பழைய திறமைகளை தற்போது வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறார். கொரன்டைன் நேரத்தில் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மிக அவசிமானதாகும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என்று கேட்டுகொண்டுள்ளார் .

இந்த காணொளியில் விஜய்குமாரும் இளைஞரை போல எந்த அச்சமும் இன்றி ஒரு கையை பாக்கெட்டில் வைத்து மற்றொரு கையில் கம்பை வைத்து மிக அகழாக சிலம்பத்தை சுழற்றுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் விஜயகுமாரை பாராட்டி வருகின்றனர்.
மேலும் இந்த கொரன்டைன் நேரம் நமக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட கொடுத்துள்ளது இதில் பலரும் நம் அப்பாவின் பல சொல்லபடாத திறமைகளை கண்டு வருகிறோம். இந்த விடுமுறையில் கிடைத்திருக்கும் சிறப்பம்சம் இது தான் என்று அருண்விஜய் பதிவேற்றிய காணொளியின் கமெண்டில் ரசிகர்கள் சிலர் கூறியுள்ளனர்.

எப்போதும் சமூக வளைத்தலங்களில் அதிகம் ஆக்டிவ்வாக இருக்கும் அருண்விஜய் தற்போது விடுமுறையில் இருப்பதால் அதிகபடியான நேரத்தை உடற்பயிற்சி மற்றும் இணையத்தில் செலவிட்டு வருகிறார். இந்த நேரத்தில் ரசிகர்கள் தங்கள் திறமைகளின் வாயிலாக காட்டும் அன்பிற்கு பதில் கூறியும் நன்றி தெரிவித்தும் வருகிறார் அருண்விஜய்.
Recommended Video
இந்த நேரத்தில் நாம் கொரோனாவை எதிர்த்து பாதிக்கும் மேல் ஆற்றை கடந்து விட்டோம். இன்னும் வெகுசில நாட்களே கொரன்டைன் முடிய இருக்கிறது இந்த கொஞ்ச நாட்களில் மனதின் திடத்தை இழந்து விடாமல் இருப்பது தான் சரி என்று பல பிரபலங்களும் மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மனதிடமும் உடல் திடமும் அவசியம் அப்போது தான் இந்த கடுமையான ஆற்றை கடந்து விட முடியும் என்று பகிர்ந்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











