உங்களிடம் இல்லாததற்கு ஆசைப்படாதீங்க..அனிதா விஜயகுமாரின் அட்வைஸ்!
சென்னை: பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் மகள் தியாவின் திருமணம் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை தொடர்ந்து இத்தனை நாட்கள் பலருக்கும் தெரியாமல் இருந்த அனிதா விஜயகுமாருக்கு என்றே தனி ரசிகர்கள் உருவாகி இருக்கிறார். தற்போது இவர் தனது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கான அட்வைசை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துகண்ணுவின் மகள்கள் கவிதா, அனிதா இவர்கள் இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். அருண்விஜய் இவர்களின் சகோதரர் ஆவார். அருண் விஜய் பிறந்த சில வருடங்களில், நடிகை மஞ்சுளாவுடன் ஒன்றாக இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து, முதல் மனைவியின் சம்மதத்துடன், மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்: இவர்களுக்கு வனிதா, ப்ரீத்தா,ஸ்ரீ தேவி என மூன்று மகள்கள் இவர்கள் மூன்று பேருமே சினிமாவில் நடித்துள்ளனர். கவிதா, அனிதா இருவருமே மருத்துவர் என்பதால், இவர்கள் இருவரும் சினிமாவில் தலைகாட்டவில்லை. அனிதா கல்லூரியில் படித்த கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அனிதா-கோகுல் தம்பதியருக்கு மகன் ஸ்ரீஜெய், தியா என இரண்டு பிள்ளைகள். இதில் தியா அம்மாவைப் போலவே மருத்துவராக வெளிநாட்டில் மருத்துவம் படித்து வந்த இவர், தன்னுடன் படித்த திலன் என்பவர் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இவர்களின் திருமணம். மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது.

உண்மையான செல்வம் நேரம் தான்: இந்நிலையில், அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மகிழ்ச்சியாக வாழ ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார் அதில், தினமும் மன உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் தூங்க செல்லுங்கள். உங்களிடம் இல்லாததற்கு ஆசைப்பட்டு, இருப்பதை கெடுக்க வேண்டாம்.வாழ்க்கையின் உண்மையான செல்வமே நேரம் தான். அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். பலருக்கு எந்த ஒரு அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல் மரணம் வந்து கொண்டிருக்கிறது. நான் 25 ஆண்டுகளாக அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவராக இருந்த அனுபவத்தில் இதை சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு லைக்குள் குவிந்து வருகிறது.




Click it and Unblock the Notifications











