சின்னக்கவுண்டர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்...சலிம் கவுஸ் குறித்து விஜயகாந்த் வேதனை!
சென்னை: நடிகர் விஜயகாந்த் பல திரைப்படங்களில் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப் போட்டவர். அதில் சின்னக்கவுண்டர் படத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். அதற்கு அவருக்கு மிகவும் பவர்புல்லான வில்லனாக அமைந்திருந்தார் நடிகர் சலிம் கவுஸ். நேற்றைய தினம் சலிம் கவுஸ் காலமானார்.

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். இவரது ரமணா, சின்னக் கவுண்டர் உள்ளிட்ட படங்கள் எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தவை. குறிப்பாக சின்னக்கவுண்டர் படம் ரசிகர்களை இன்றளவும் கட்டிப் போட்டு வருகிறது. இந்தப் படத்தின் திரைக்கதை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

மிரட்டல் வில்லன் சலிம் கவுஸ்
படத்தில் சுகன்யாவின் கேரக்டர் படத்திற்கு வலிமை சேர்த்தது போலவே படத்தின் வில்லன் சலிம் கவுசும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் அழுத்தமான கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அவருக்கு வசனங்கள் குறைவாக இருந்த நிலையில், தன்னுடைய பாடி லேங்குவேஜ் மூலமாகவே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

விஜயகாந்திற்கு நெருக்கடி
படத்தில் விஜயகாந்திற்கு எதிரான இவரது செயல்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஒவ்வொரு விஷயத்தையும் அவர் நிதானமாக யோசித்து செயல்பட்டு விஜயகாந்த்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றைய தினம் சலிம் கவுஸ் இதயநோய் காரணமாக காலமானார்.

விஜயகாந்த் இரங்கல்
இந்நிலையில் சலிம் கவுஸ் காலமானது குறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சலிம் கவுஸ் காலமானது குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் மிகச்சிறந்த நடிகர் சலிம் கவுஸ் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சிறப்பான நடிப்பு
மேலும் பழகுவதற்கு நல்ல மனிதருமான சலிம் கவுஸ் சின்னக்கவுண்டர் படத்தில் தன்னுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் என்றும் கூறியுள்ளார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சலிம் கவுஸ் தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் சிறப்பான படங்களில் நடித்துள்ளார்.
Recommended Video

வேதநாயகம்னா பயம்
விஜய்யுடன் இவர் நடித்த வேட்டைக்காரன் இவருக்கு சிறப்பாக அமைந்தது. அந்தப் படத்தின் வேதநாயகம்னா பயம் என்ற வசனம் இன்றுவரை சிறப்பான வசனமாக பார்க்கப்படுகிறது. அந்த வசனம்தான் விஜய்யின் பாதையை படத்தில் மாற்றும் வகையில் காண்பிக்கப்படும்.


Click it and Unblock the Notifications











