Leo: விஜய்க்கு நல்லா ஓடுன படமே சுமாரா தான் இருக்கும்.. பிரபல இயக்குநர் என்ன இப்படி சொல்லிட்டாரே?

சென்னை: ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு நல்லா ஓடுன படமே சுமாரா தான் இருக்கும் என பகீர் கிளப்பி உள்ளார்.

லியோ திரைப்படம் வசூலில் ஒரு பக்கம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் படத்தின் கதை சிறப்பாக இல்லை என்றும் ஃபிளாஷ்பேக் போர்ஷன் வெயிட்டாக இல்லை என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ப்ளூ சட்டை மாறன், பயில்வான் ரங்கநாதன், பிஸ்மி, அந்தணன், மீசை ராஜேந்திரன், செய்யாறு பாலு என யாரெல்லாம் படம் வருவதற்கு முன்னாடி ஓவர் பில்டப் கொடுக்கின்றனரோ படம் ரிலீஸ் ஆன பின்னர் அவர்களே ஓவராக பொளந்து வருகின்றனர்.

Actor Vijays all movies are not too good - Praveen Gandhi interview

இண்டஸ்ட்ரி ஹிட்: இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டை ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் வசூல் வேட்டை நடத்திய நிலையில், இந்த ஆண்டு வாரிசு, துணிவு, வாத்தி, பொன்னியின் செல்வன் 2, மாவீரன், மாமன்னன், போர் தொழில், ஜெயிலர் மற்றும் லியோ என தொடர்ந்து பல பெரிய படங்கள் தமிழ் சினிமாவுக்கு வசூலை வாரி குவித்துள்ளன. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் படமாக லியோ மாறியுள்ளது என்கின்றனர்.

இரண்டாம் பாதி சரியில்லை: இந்த ஆண்டு வெளியான பல படங்களுக்கும் இதே பிரச்சனை எழுந்தது. முதல் பாதி சூப்பர் இரண்டாம் பாதி சரியில்லை என்கிற விமர்சனம் துணிவு, பொன்னியின் செல்வன் 2, மாவீரன், மாமன்னன், ஜெயிலர் மற்றும் தற்போது வெளியான லியோ வரை அந்த சாபம் தொடர்ந்து வருகிறது.

Actor Vijays all movies are not too good - Praveen Gandhi interview

விஜய் படங்கள் எல்லாமே சுமார் தான்: இந்நிலையில், ஆரம்பத்தில் ரட்சகன், ஜோடி, ஸ்டார் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து விட்டு அதன் பின்னர் துள்ளல், புலிப்பார்வை என படு மொக்கை படங்களை கொடுத்த இயக்குநர் பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த கில்லி, போக்கிரி படங்களே சுமார் படங்கள் தான் என்றும் அவர் நடித்து வெளியான படங்களிலேயே சூப்பர் என்றால் பூவே உனக்காக படம் மட்டும் தான் எனக் கூறியுள்ளார்.

ஜோடி தண்டனை தான்: பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, துப்பாக்கி, கைதி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களை எல்லாம் பிரவீன் காந்தியை கட்டி வைத்து விடிய விடிய ஜோடி படத்தில் ரமேஷ் கண்ணாவுக்கு போட்டுக் காட்டுவது போல காட்ட வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X