Actor Vijay: பீஸ்ட் படத்தின் BTS புகைப்படங்கள்.. என்ன சிம்பிளாவும் க்யூட்டாவும் இருக்காரு!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி வசூல் சாதனை செய்துள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்த போலும் இந்தப் படமும் வசூலில் சாதித்தது.

Actor Vijays Beast movie behind the scenes photos released

இந்நிலையில் விஜய்யின் தளபதி 68 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் தற்போது அடுத்தடுத்த ஸ்பாட்களில் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. முன்னதாக விஜய்யின் லியோ, வாரிசு, பீஸ்ட் படங்கள் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இருந்தபோதிலும் இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இந்நிலையில் அடுத்தப்படமான தளபதி 68 படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயம் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு ஏற்பட்டுள்ளது.

தளபதி 68 படம்: முன்னதாக அவர் அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்களை சூப்பர் ஹிட்டாக கொடுத்துள்ள நிலையில் தற்போது தளபதி 68 படத்தையும் சிறப்பாக்குவார் என்று ரசிகர்களை எதிர்பார்த்து காத்துள்ளனர். அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாகியுள்ளார். மேலும் படத்தில் சினேகா, பிரஷாந்த், மோகன், பிரபுதேவா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

விஜய்யை கொண்டாடும் ரசிகர்கள்: சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக உள்ளார் விஜய். அவரது படங்களின் ரிலீசை இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதேபோல அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்கள் கவனித்து வருகின்றனர். அடுத்ததாக அவரது அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பீஸ்ட் படத்தின் BTS புகைப்படங்கள்: விஜய்யின் புகைப்படங்கள், வீடியோக்கள் என எது வெளியே வந்தாலும் அது அவரது பழைய புகைப்படங்களாக இருந்தாலும் அதை கொண்டாட்ட மனநிலையுடன் அவரது ரசிகர்களை அணுகும் போக்கு உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் BTS புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் புகைப்படங்களில் அழகான மற்றும் எளிமையான விஜய்யை பார்க்க முடிகிறது.

எளிமையான விஜய்: இந்தப் புகைப்படங்களில் இயக்குநர் நெல்சன் கூறுவதை அமைதியாக அதே நேரத்தில் கூர்ந்து கவனிக்கிறார் விஜய். தொடர்ந்து மானிட்டரில் சீன்களை பார்ப்பதாகவும், நெல்சனிடம் ஜாலியாக பேசுவதாகவும் இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன. நெல்சனின் டாக்டர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக விஜய்யுடன் அவர் பீஸ்ட் படத்தில் கூட்டணி அமைத்திருந்தார். இதையடுத்து இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் தவறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X