Vijay: 500 மில்லியன் வியூஸ்களை கடந்த விஜய் பட பாடல்.. அட சூப்பர்ல!
சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களை ரசிகர்களை கவரும்வகையில் கொடுத்து வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் வேட்டை நடத்தியது.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் வாரிசு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்த மாதத்தில் அவரது நடிப்பில் லியோ படம் வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட பாடல் 500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை: நடிகர் விஜய் அடுத்தடுத்த வித்தியாசமான இயக்குநர்களின் டைரக்ஷனில் தனது படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் அவரது வாரிசு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. குடும்ப உறவுகளை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இந்த ஆண்டிலேயே அவரது லியோ படம் ரிலீசாகவுள்ளது.
லியோ படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படம் இவர்களது கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம். இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்தமாதம் அக்டோபர் 19ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வீடியோக்கள், போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள், சூட்டிங் வீடியோக்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் பாடல், ட்ரெயிலர், அடுத்தடுத்த கிளிம்ப்ஸ் வீடியோக்கள் என வெளியாகவுள்ளன. இந்நிலையில் முன்னதாக விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த பீஸ்ட் படத்தின் பாடல் செய்த சாதனை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அரபிக்குத்து பாடல் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்துவந்த இந்த பாடல் தற்போது 500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை செய்துள்ளது. இதையொட்டி தற்போது புதிய பாடல் வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பாடல் 500 மில்லியன் வீயூஸ்களை கடந்துள்ளதும் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் லியோ படத்தின் முதல் பாடல் நா ரெடிதான் வெளியாகி மாஸ் காட்டி வரும் நிலையில், தற்போது அவரது முந்தைய படத்தின் பாடலும் ட்ரெண்டாகியுள்ளது.

இதனிடையே அடுத்ததாக இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். அனிருத் இசையில் லியோ படத்தில் மொத்தமே இரு பாடல்கள்தான் உள்ளன என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்தப் பாடல் விஜய் -த்ரிஷாவின் ரொமான்டிக்கில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











