தளபதி 69 படத்தில் விஜய்யின் கேரக்டர் என்ன தெரியுமா?.. வெளியான சீக்ரெட்!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் கடந்த வாரத்தில் துவங்கப்பட்டு சென்னையில் படத்தின் முதல் ஷெடியூல் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல் கட்டமாக படத்தின் பாடல் காட்சிக்கான சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் விஜய் கட்சியின் அரசியல் மாநாடு நடக்கவுள்ள நிலையில், அதையடுத்தே 2வது ஷெட்யூல் திட்டமிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தளபதி 69 படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் எங்கே நடக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் சூட்டிங் கடந்த மாதம் 5ம் தேதி பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் பிரமாண்டமான செட் போடப்பட்டு பாடல் காட்சியுடன் துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாடல் காட்சியின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார். முன்னதாக விஜய் மற்றும் அனிருத் காம்பினேஷனில் அடுத்தடுத்த படங்கள் மாஸ் காட்டிய நிலையில் தளபதி 69 விஜயின் இறுதி படமாக அமைந்துள்ள நிலையில் அந்த படத்தின் இசை மற்றும் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கேரக்டர்: படத்தை தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ஹெச் வினோத் இயக்கிவரும் நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் காவல்துறை மையமாக வைத்து படத்தின் கதைக்களத்தை அவர் அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் எக்ஸ் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அரசியல் கலவையுடன் தளபதி 69 படம் உருவாகிவரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்: படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு 275 கோடி ரூபாய்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில் தளபதி 69 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த அப்டேட் தற்போது ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
விஜய் -ஹெச் வினோத் கூட்டணி: அரசியலுடன் சமுதாய அக்கறையையும் தளபதி 69 படத்தில் ஹெச் வினோத் இணைத்துள்ளதாகவும் 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இந்தப் படம் மிகப்பெரிய பலத்தை விஜய்க்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டியே அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தளபதி 69 படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் டைட்டிலும் அவரது அரசியல் என்ட்ரியை கருத்தில் கொண்டு மிகவும் சிறப்பாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிறப்பான சம்பவத்தை விஜய் -ஹெச் வினோத் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











