Denzel Washington: திடீரென டிரெண்டான டென்சல் வாசிங்டன்.. அவர் நடித்த தரமான டாப் 3 படங்கள் இதோ!
ஏஞ்சல்ஸ்: இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் திடீரென இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகிவிட்டார்.
நடிகர் விஜய் லாஸ் ஏஞ்சல்ஸில் டென்சல் வாஷிங்டன் நடித்த ஈக்குவலைசர் 3 படத்தை தியேட்டரில் ஃபேன் பாய் மொமென்ட் ஆக பார்த்த போட்டோவை இயக்குனர் வெங்கட் பிரபு ஷேர் செய்ததில் இருந்து யார் இந்த டென்ஷன் வாஷிங்டன் என விஜய் ரசிகர்கள் தேட ஆரம்பித்து விட்டனர்.

அதன் விளைவு தற்போது டென்ஷல் வாஷிங்டன் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறார். 10 முறை ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ள டென்ஷல் வாஷிங்டன் இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள டென்ஷன் வாஷிங்டன் நடிப்பில் ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய டாப் 5 படங்கள் குறித்த லிஸ்டை இங்கே பார்க்கலாம் வாங்க..
1. க்லோரி (Glory): 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி வெளியான குளோரி படத்தை இயக்குனர் எட்வர்ட் ஸ்விக் இயக்கியிருந்தார். டென்சல் வாஷிங்டன் மற்றும் மார்கன் ஃப்ரீமேன் நடித்த க்லோரி திரைப்படம் அமெரிக்கன் சிவில் வாரை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை டென்சல் வாஷிங்டன் என்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்த்தாலே நிச்சயம் டென்சல் வாஷிங்டன் ரசிகராக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

2. டிரெய்னிங் டே (Training Day): 2001 ஆம் ஆண்டு வெளியான ட்ரெய்னிங் டே திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை டென்சல் வாசிங்டன் என்றார். லோகேஷ் கனகராஜ் போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமான படங்களை இப்போ இயக்கி இட்டடித்து வருவதைப் போல அப்பவே டென்சன் வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் தான் ட்ரைனிங் டே. இந்த படத்தை ஆண்டனி புக்வா இயக்கியுள்ளார்.

3. டெவில் இன் எ ப்ளூ டிரெஸ் (Devil in a Blue Dress): 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான டெவில் இன் எ ப்ளூ டிரஸ் திரைப்படம் டென்ஷன் வாஷிங் டென்த் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கியது. இயக்குனர் கார்ல் பிராங்க்ளின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் காணாமல் போன ஒரு வெள்ளைக்கார பெண்ணை தனக்கு இருக்கும் கடனை அடைக்க கண்டுபிடிக்கும் நபராக நடித்திருப்பார் டென்சல் வாசிங்கடன். இந்த படமும் ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் பட வகையறாத்தான். இவை மட்டுமல்ல, ஃபென்சஸ், மிசிசிபி மசாலா, போன் கலெக்டர், தேஜாவு, ஈக்வலைசர் 1 மற்றும் 2 என அனைத்து படங்களுமே ரசிகர்க்ளின் ஃபேவரைட் படங்கள் தான். ஹாலிவுட் விஜயகாந்த் என்றே இவரை ரசிகர்கள் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 68 வயதிலும் ஈக்வலைசர் 3 படத்தில் அதிரடி ஆக்ஷனில் மிரட்டியிருக்கிறார் டென்சல் வாசிங்டன்.



Click it and Unblock the Notifications











