Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!

சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது கில்லி. இந்தப் படம் 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மிகப்பெரிய சக்சஸையும் விஜய்க்கு மிகப்பெரிய அடையாளத்தையும் கொடுத்தது. தமிழில் முதல்முறையாக 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றது. இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளை கடந்து இந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் நூற்றுக்கணக்கான கோடி லாபங்களை கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டில் வெளியான விஜய்யின் லியோ படம் 600 கோடி ரூபாய் லாபத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு விஜய் 200 முதல் 250 கோடி ரூபாய்கள் வரை சம்பளமாக பெற்று வருகிறார். அவரது ஒவ்வொரு படமும் கொண்டாட்டமாக உள்ள நிலையில் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள கில்லி படமும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Vijay s Ghilli movie actress Janaki ganesh vibes in theatre with fans

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் பல நூறு கோடிகளை வசூலித்து வருகின்றன. ஒவ்வொரு படத்திற்கும் அவரது சம்பளம் மட்டுமே 200 முதல் 250 கோடி ரூபாய்களாக உள்ளது. ஆயினும் அரசியலில் சிறப்பான தலைவராக மாற வேண்டும் என்ற வேட்கையில் சினிமாவிற்கு முழுக்குப் போடும் முடிவை எடுத்துள்ளார் விஜய். தற்போது நடித்து முடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்களை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்: விஜய்யின் ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவரது படங்களின் FDFSவை பார்க்க vibe செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தளபதி 69 படத்தை தொடர்ந்து இந்த கொண்டாட்டங்கள் மிஸ்ஸிங் ஆகும் என்று ரசிகர்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர். ஆயினும் அவரது 69 படங்களையும் ரீ ரிலீஸ் செய்து FDFSவை என்ஜாய் செய்யலாம் என்று நேற்றைய தினம் ரசிகர் ஒருவர் கூறியதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் அவரது கில்லி படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கில்லி ரீ ரிலீஸ்: விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது கில்லி. பூவே உனக்காக உள்ளிட்ட சாஃப்டான கேரக்டர்களில் நடித்துவந்த விஜய்யை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது கில்லி படம். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மாஸாக்கியிருந்தார் இயக்குநர் தரணி. அதை சாத்தியப்படுத்தியிருந்தார் விஜய். படத்தில் விஜய் -திரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரி, வித்யாசாகர் இசையில் வெளியான பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட்டாக அமைந்தன. இந்நிலையில் இந்தப் படத்தின் ரீ ரிலீசையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கில்லி அம்மா குத்தாட்டம்: இந்தப் படத்தை திரையில் சென்று பார்த்த விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை ஜானகி கணேஷ், ரசிகர்களுடன் இணைந்து படத்தின் அப்படி போடு பாடலுக்கு செமையாக குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் வீட்டின் வாஸ்து சரியில்லை என்று விஜய் கூற, கவர்ன்மெண்ட் குவார்ட்டர்சை விற்றுவிடலாமா என்று ஜானகி அப்பாவித்தனமாக கேட்கும் காட்சிகளில் அவர் அதிகமாக ஸ்கோர் செய்திருப்பார். அந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பை வழங்கியிருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X