Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!

சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 20ம் தேதி சர்வதேச அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீசாகவுள்ளது. இதன் இறுதிக்கட்ட சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்கோவில் நடந்து முடிந்துள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த சூழலில் அடுத்ததாக படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை படக்குழுவினர் துவங்கவுள்ளனர். இதனிடையே அடுத்ததாக விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Actor Vijay s Ghilli movie re-release enjoyed by the international fans

நடிகர் விஜய்: நடிகர் விஜய் எப்போதுமே மாஸ் ஹீரோதான். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை சர்வதேச அளவில் கவர்ந்து வருகின்றன. விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான வாரிசு மற்றும் லியோ படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்தன. படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையிலும் படம் வசூலிக்க தவறவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், 600 கோடி ரூபாய்களை வசூலித்து சாதனை படைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். மேலும் தற்போது நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் அடுத்ததாக தளபதி 69 படங்களை நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தப்படங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன. கோட் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கில்லி ரீ-ரிலீஸ்: இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படமும் அதிகமான எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப்படத்தின் அறிவிப்பு விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் விஜய்யின் கில்லி படம் கடந்த 20ம் தேதி சர்வதேச அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் தரணி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தற்போது 20 ஆண்டுகளை கடந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப்படத்தை சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சைனீஷ் ரசிகர் கில்லி படத்தின் ரீ-ரிலீசை கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/thuosi/status/1782776524040515592

கொண்டாடிய சீன ரசிகர்: சைனீஷ் ரசிகர் ஒருவர், கில்லி படத்தின் திரையரங்கில் ஐ லவ் விஜய் என்று கத்தியதை பார்க்க முடிந்தது. நடிகர் விஜய்யின் படங்களுக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் எப்போதுமே காணப்படுகின்றனர். அவரது படங்களை FDFSவாக பார்ப்பதில் எப்போதும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படத்திற்கும் அதே போன்ற வரவேற்பு சர்வதேச அளவில் காணப்படுகிறது. இந்தப் படம் கடந்த 3 நாட்களில் 14 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படம் அரங்கு கொள்ளாத காட்சிகளாக ஓடி வரும் நிலையில், தொடர்ந்து இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X