Actor Vijay: முதல் நாளில் விஜய்யின் கில்லி ரீ - ரிலீஸ் வசூல்.. அட இவ்வளவா!
சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது கில்லி. விஜய்யின் கேரியரில் பெஸ்டாக அமைந்தது இந்தப் படம். படத்தில் விஜய்க்கு மாஸான பல காட்சிகளை சேர்த்திருந்தார் இயக்குநர் தரணி. படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகரும் சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். எல்லாம் இணைந்து இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கியது.
தற்போது 20 ஆண்டுகள் கழித்து கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் ஆனாலும் இந்தப் படத்தின் கெத்து சிறிதும் குறையவில்லை. இளம் தலைமுறையினர் மட்டுமில்லாமல் குழந்தைகளும் திரையரங்குகளில் கொண்டாட்டத்துடன் இந்தப் படத்தை பார்த்ததை பார்க்க முடிந்தது. சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் இந்தப் படம் பெஸ்டாக அமைந்துள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் என்றாலே எப்போதுமே மாஸ்தான். நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானபோது, அவர் இந்த அளவிற்கு ரசிகர்கள் இதயத்தில் இடம்பெறுவார் என்று யாருமே நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இதை சாதித்துக் காட்டியுள்ளார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில், நடிப்பிலிருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். ஒரு படத்திற்கு 200 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுவரும் விஜய் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை தவிர வேறு யாரும் இதுபோன்ற முடிவை எடுக்க முடியாது என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கில்லி படம்: விஜய்யின் கேரியரில் பெஸ்ட்டான பல படங்கள் உள்ள நிலையிலும் அவரது கேரியர் பெஸ்ட் படமாக கில்லி படம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. விஜய்யின் அதிரடி ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட், திரிஷாவின் க்யூட்னஸ், பிரகாஷ்ராஜின் வில்லத்தனம், அவரது வில்லத்தனத்திலும் காதல் என்ற ஒரு நியாயம் போன்ற பல விஷயங்கள் இந்தப் படத்தில் காணப்பட்டன. கடந்த 2004ம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. தமிழில் முதல்முதலாக 50 கோடி ரூபாய் வசூலித்த படம் இது என்று கூறப்பட்டுள்ளது.
கில்லி ரீ-ரிலீஸ்: இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தப் படம் மீண்டும் சர்வதேச அளவில் நேற்றைய தினம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே இந்தப் படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் புக் செய்ததை பார்க்க முடிந்தது. ஆன்லைனிலும் டிக்கெட் புக்கிங் சிறப்பாக அமைந்திருந்தது. சில திரையரங்குகளில் தொடர்ந்து 6 நாட்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல்: தற்போது விடுமுறை நாட்கள் என்பதாலும் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த முன்னணி நடிகரின் படங்களும் ரிலீசாகவில்லை என்பதாலும் கில்லி படம் திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் முதல் நாளில் சர்வதேச அளவில் கில்லி படத்தின் கலெக்ஷன் 10.6 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கலெக்ஷனே 50 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது முதல் நாளிலேயே 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனால் படம் 200 கோடி ரூபாய்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











