தாறுமாறாக வசூலை குவிக்கும் விஜய்யின் கோட் படம்.. 4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கொண்டாட வைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியான கோட் படம் முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலை குவித்தது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் 4 பாடல்கள் அடுத்தடுத்து லிரிக் வீடியோ பாடல்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்தின் மட்ட பாடல் ரசிகர்களை வைப் செய்ய வைத்து வருகிறது.

vijay goat movie venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை அளித்து வருகிறது. கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த 4 பாடல்கள் லிரிக் வீடியோ பாடல்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக விஜய் -திரிஷா இணைந்து ஆட்டம் போட்டுள்ள மட்ட பாடல் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.

கோட் பட அதிகாரப்பூர்வ வசூல்: கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. கோலிவுட்டிலேயே முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்த இரு படங்களின் சொந்தக்காரராக விஜய் பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளார். முன்னதாக அவரது லியோ படமும் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் தற்போது கடந்த 4 நாட்களில் கோட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் கோட் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 288 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு: படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமுகவலைதளப் பக்கங்களில் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். நான்கு நாட்களிலேயே கோட்படம் இந்த வசூலை எட்டியுள்ள நிலையில், இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் தாறுமாறாக உயரும் என்று எதிர்பார்க்கலாம். இன்று முதல் வாரநாட்களின் வசூல் எண்ணிக்கை கணிக்கப்படும். அந்த வகையில் இன்றும் ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் சென்று மிகப்பெரிய கொண்டாட்டங்களுடன் பார்த்து வருகின்றனர். இதனால் வார நாட்களிலும் படத்தின் வசூல் சிறப்பாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்: தொடர்ந்து கோட் படம் மற்றும் அதன் வரவேற்பு ட்விட்டரில் ட்ரெண்டிலேயே உள்ளது. சிறுவர்கள் இந்தப் படத்தை கொண்டாடுவதை ஏஜிஎஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. தெலுங்கில் இந்த படம் போதிய ரசிகர்களை ஈர்க்காத நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படம் சில தினங்களிலேயே இந்த மாநிலங்களில் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X