எங்க வந்து யாருகிட்ட.. மட்ட பாடல் வரிகளை பகிர்ந்த பாடலாசிரியர் விவேக்.. ரைமிங் சூப்பருங்கோ!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய் படங்களின் ரிலீசை அவரது ரசிகர்கள் திருவிழாவாக திரையரங்குகளில் கொண்டாடுவார்கள். அதேபோல இந்தப் படத்தின் ரிலீசையும் கொண்டாட காத்திருக்கின்றனர்.

கோட் படத்துடன் தளபதி 69 படத்தையும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக விஜய் முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் கோட் படம் அவரது கேரியர் பெஸ்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பல மாஸான விஷயங்களை இயக்குநர் வெங்கட் பிரபு இணைத்துள்ளார்.

vijay goat movie vivek

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் ரிலீசுக்கு பக்கா மாஸாக தயாராகி வருகிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். விஜய் படங்களுக்கு பிரமோஷன்கள் தேவையில்லை என்ற போதிலும் படங்களுக்கு இயல்பாக செய்ய வேண்டிய பிரமோஷன்களை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. படத்தின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ள நிலையில், 4வது சிங்கிளும் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

4வது பாடல்: கோட் படத்தின் 4வது சிங்கிள் குறித்த அறிவிப்பை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அடுத்தடுத்து வெளியிட்டு உற்சாகம் தெரிவித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான பாடல் நாளை வெளியாக உள்ள மட்ட பாடல் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். கோட் படத்தின் 4வது பாடலின் டைட்டில் மட்ட என்று அவர் தெரிவித்துள்ள நிலையில் இது என்ன மட்ட என்று ரசிகர்கள் அங்கலாய்த்து வருகின்றனர். ஆனால் இதற்கு பதிலளிக்கும்படியாக பாடலாசிரியர் விவேக் இந்த பாடலின் சில வரிகளை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சிறப்பான விளக்கத்தை இந்த வரிகளின் மூலமாகவே கொடுத்துள்ளார். மச்சி கெடா மஞ்ச சட்ட, மம்டி வரான் பள்ளம் வெட்ட, மட்ட மட்ட ராஜ மட்ட, எங்க வந்து யாருகிட்ட என்பதாக வரிகள் அமைந்துள்ளன.

vijay goat movie vivek

இளையதளபதியின் பிளாஸ்ட்: மேலும் இளையதளபதியின் பிளாஸ்ட் என்றும் நாளைய தினம் ஆட்டநாயகனின் ஆட்டத்தை கொண்டாட காத்திருக்கும் படியும் அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். முன்னதாக இளைய தளபதியுடன் பார்ட்டி பண்ண ரெடியா என்று அர்ச்சனா கல்பாத்தி கேட்டிருந்த நிலையில் அதை மேலும் நிரூபிக்கும் வகையில் தற்போது விவேக்கும் ஆட்டநாயகனின் ஆட்டத்தை பார்க்க தயாராகுமாறு கூறியுள்ளார். இந்த பாடலின் வரிகள் இளம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. நாளை மாலை 6:00 மணியளவில் இந்த பாடல் ரிலீசாக உள்ளதாக அர்ச்சனா கல்பாத்தியும் தெரிவித்துள்ளார்.

பார்ட்டிக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்: இந்த பாடல் நாளை மாலை வெளியாக உள்ள நிலையில் அர்ச்சனா கல்பாத்தி கூறியபடி இளம் விஜய் ரசிகர்கள் இளைய தளபதியுடன் பார்ட்டி கொண்டாட தயாராக உள்ளனர். மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் உருவாகியுள்ள கோட் படத்தை இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடவும் அவர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். நாளைய தினம் வெளியாக உள்ள கோட் சிங்கிள், விஜய் மற்றும் திரிஷா இணைந்து ஆட்டம் போட்டுள்ள பாடலாக இருக்கலாம் என்று யூகிக்கப்படும் நிலையில் ரசிகர்களும் அவ்வாறே எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X