Actor Vijay: விஜய்யின் கோட் பட 4வது சிங்கிள் அப்டேட்.. இளைய தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா?

சென்னை: நடிகர் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கோட். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளனர்.

மேலும் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் ஏராளமான நடிகர், நடிகைகளை வைத்து வேலை வாங்கியுள்ளார் வெங்கட் பிரபு. மொத்தத்தில் படம் கலர்ஃபுல் கலாட்டாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay goat movie tamil cinema

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ளது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இவர்கள் மட்டுமில்லாமல் வெங்கட் பிரபுவின் கேங்கை சேர்ந்த பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் போதாது என்று சிவகார்த்திகேயன், திரிஷா, வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களும் படத்தில் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகப்படுத்தியுள்ளது.

கோட் படம்: இந்நிலையில் கோட் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளதையொட்டி படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகின்றனர். இயக்குனர் வெங்கட் பிரபு, வைபவ், சினேகா உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. அடுத்ததாக 4வது சிங்கிள் அடுத்ததாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் 4வது சிங்கிள் குறித்து தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

4வது சிங்கிள் குறித்த அறிவிப்பு: வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விஜய்யின் கோட் படத்தின் 4வது சிங்கிள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைய தளபதியுடன் பார்ட்டி பண்ண ரெடியா என்றும் கேள்வி கேட்டுள்ளது. இளைய தளபதியாக இருந்த நடிகர் விஜய் தளபதியாக எப்போதோ மாறிவிட்டார். ஆனாலும் ஏஜிஎஸ் நிறுவனம் இளைய தளபதி என்று குறிப்பிட்டுள்ளதால் படத்தில் மகன் விஜய்யின் பாடல் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் 3வது சிங்கிள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த பாடலும் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

வீக் எண்ட்டில் வெளியாகும் பாடல்: கோட் படத்தில் திரிஷாவுடன் விஜய் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள நிலையில் இந்த 4வது சிங்கிள் இவர்களது காம்பினேஷனில் வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அது உண்மைதானா என்ற கேள்விக்கு நாளை மறுதினம் விடை கிடைக்கும். வீக் எண்ட்டில் இந்த பாடல் வெளியாகவுள்ளதும் பார்ட்டி கொண்டாட ரெடியா என்று ஏஜிஎஸ் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளதும் இந்தப் பாடல் கண்டிப்பாக ரசிகர்களின் கொண்டாட்டத்தை எகிற வைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X