கண்ணடித்த திரிஷா.. கன்னத்தை கிள்ளிய சினேகா.. என்னா சேட்டை பண்றாரு விஜய்.. கோட் படத்தின் Bloopers!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் நேற்றைய தினம் நெட்ஃபிளிக்சில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் Bloopers வீடியோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய், திரிஷா, சினேகா, வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டைகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.

கோட் படத்தின் Bloopers வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விஜய் வெளியிடங்களில் மிகவும் அமைதியாக காணப்படும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இவ்வளவு சேட்டைகள் செய்வாரா என்று கேள்வி எழுப்பும் வகையில் இந்த வீடியோ காணப்படுகிறது.

vijay goat movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பூஜையில் நடிகர் விஜய் பட்டு வேட்டி சட்டையில் மிகவும் அழகாக காணப்பட்டார். அவருடன் நடிகை பூஜா ஹெக்டேவும் அழகான புடவையில் இணைந்து கொண்டார். மேலும் படத்தின் மற்றொரு நாயகியான மமிதா பைஜுவும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டவர்களும் இந்த பட பூஜையில் கலந்து கொண்டனர். இதன் அழகான புகைப்படங்களை கேவி என் நிறுவனம் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

கோட் படம்: இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கொண்டாட செய்துள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான தளபதி 68 படமான கோட் படம் நேற்றைய தினம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சினிமாவில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான ஓபனிங்கை கொடுத்துள்ளது. இந்த படத்தை தற்போது ஏராளமான ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து வருகின்றனர். இதனிடையே இன்று காலை கோட் என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட மோதிரத்தை தன்னுடைய கையில் அணிந்து நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது கோட் படத்தில் அவருடன் இணைந்து நடித்த தயாரிப்பாளர் ஒருவரின் அன்பு பரிசு என கூறப்பட்டுள்ளது.

கோட் படத்தின் Bloopers: இந்நிலையில் தற்போது கோட் படத்தின் Bloopers வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து செய்த சேட்டைகள் காணப்படுகின்றன. இந்த வீடியோவில் நடிகர் விஜய்யின் சேட்டை கொஞ்சம் அதிகமாகத்தான் காணப்படுகிறது. அவர் பொது இடங்களில் மிகவும் அமைதியானவராக காணப்படும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் சேட்டை செய்பவராக கலகலப்பானவராக காணப்படுகிறார். அந்த வகையில் இந்த வீடியோவிலும் அடுத்தடுத்து அவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளன.

கண்ணடிக்கும் திரிஷா: கோட் படத்தில் தன்னுடைய மகளை பறிகொடுத்து விட்டு பிரஷாந்த் கதறி அழுவதாக காட்சி அமைந்திருக்கும். இதில் அவர் கதறுவதாக நடித்துக் கொண்டிருக்க, அங்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் நடிகர் விஜய் அதை பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து ஓடுவதாக காணப்படுகிறது. இதனிடையே மட்ட பாடலில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் நடிகை திரிஷா அவரைப் பார்த்து கண்ணடிப்பதாக உள்ளது. இதனிடையே லேபர் பெயின் எடுத்து எமர்ஜென்சி வார்டிற்கு செல்லும் சினேகாவும் வெங்கட் பிரபுவும் இணைந்து சிரிப்பதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது.

vijay goat movie

கன்னத்தை கிள்ளும் சினேகா : தொடர்ந்து விஜய் ஏதோ கமெண்ட் செய்ய அவரது கன்னத்தை பிடித்து சினேகா கிள்ளுவதாகவும் இந்த bloopersல் காணப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் உள்ளிட்டவர்கள் செய்த காமெடி கலாட்டாக்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. கோட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பல சுவாரசியங்களை நம் கண் முன்னால் கொண்டு வருவதாக இந்த வீடியோ காணப்படுகிறது

vijay goat movie

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X