Vijay: A Lion is always a Lion.. கோட் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன காரணம்?
சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. படத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில் படம் ரசிகர்களை கொண்டாடவே செய்தது.
படத்தில் அப்பா மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்திருந்த நிலையில், தனக்கு பிடித்தமான கிரிக்கெட்டையும் தோனியையும் படத்தின் க்ளைமாக்சில் இணைத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் விஜய்யுடன் சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, திரிஷா ஆகியோர் படத்தில் கேமியோ கேரக்டர்களில் கலக்கல் பர்பார்மென்சை கொடுத்திருந்தனர். குறிப்பாக விஜய்யுடன் பாடல் ஒன்றிற்கு திரிஷா ஆட்டம் போட்டிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் பாடல் மிகப்பெரிய வைபை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தது.
கோட் படம்: ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை வைத்து இந்த படத்தில் வேலை வாங்கியிருந்தார் வெங்கட் பிரபு. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 448 கோடி ரூபாய்களை வசூலித்து இந்த ஆண்டின் சிறப்பான வசூல் படமாக அமைந்துள்ளது. படம் அடுத்தடுத்து திரையரங்குகளில் மிகச் சிறப்பாக அமைந்த நிலையில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படம் ரிலீஸ் ஆகி 100 நாட்களை கடந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
100 நாள் கொண்டாட்டம்: இதையொட்டி கோட் படத்தின் காட்சிகளை இணைத்து ஸ்பெஷல் பிரமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் இருவேறு வேடங்களில் நடித்திருந்த விஜய்யின் அடுத்தடுத்த கேரக்டர்களின் காம்பினேஷன் காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் கவனத்தை கவர்ந்துள்ளன. படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் நண்பர்களாக நடித்திருந்தனர். இந்த காம்பினேஷன் ரசிகர்களை அதிகமாக கட்டிப் போட்டது. பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் உள்ளிட்ட தன்னுடைய கேங்கையும் படத்தில் வெங்கட்பிரபு இணைத்திருந்தார்.
தளபதி 69 படம்: கோட் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை விஜய் அறிவித்த நிலையில், தற்போது நடித்துவரும் தளபதி 69 படம்தான் அவரது கடைசி படம் என்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்துடன் அவர் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் தளபதி 69 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் வில்லனாக பாபி தியோலும் இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications