Actor Vijay: விஜய்யின் கோட் பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமை.. அட இதுலகூட கூட்டணியா?
சென்னை: நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் முன்னதாக டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகள் சிறப்பான விலைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கோட் படத்தின் வெளிநாட்டு உரிமைகளை வாங்கிய நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன்களை மேற்கொள்ள தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் இறுதி படமாக தளபதி 69 அமைந்துள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய கவனத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ள சூழலில் படத்தின் ரிலீசுக்காக தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார். கோட் மற்றும் தளபதி 69 படங்களை தொடர்ந்து சினிமாவிலிருந்து விஜய் விலக உள்ளதாக அறிவித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ரிலீஸ் உரிமை: இதனால் இந்த இரண்டு படங்களும் அதிகமான எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் கோட் படத்தின் டிஜிட்டல் உள்ளிட்ட அடுத்தடுத்த உரிமைகள் முன்னதாக மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது. முன்னதாக விஜய்யின் மெர்சல், மாஸ்டர், பிகில் உள்ளிட்ட படங்களின் வெளிநாட்டு உரிமையை ஹம்சினி கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் வட அமெரிக்கா, யூகே மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களின் வெளியிட்டு உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது.
ஹம்சினி -அஹிம்சா நிறுவனங்கள்: பிரபல நிறுவனமான அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் கைக்கோர்த்து ஹம்சினி நிறுவனம் இந்த வெளிநாடுகளின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து வீடியோ மூலம் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளது. விஜய் ஸ்டைலில் நண்பா அண்ட் நண்பீஸ் என்று கேப்ஷனில் தெரிவித்துள்ளது. அஹிம்சா என்டர்டெயின்மெண்டுடன் கைக்கோர்த்து இந்த உரிமைகளை வாங்கியுள்ளதாகவும் உற்சாகம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா யுகே ஆகிய நாடுகளில் மிக அதிகமான திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்யவும் ஹம்சினி மற்றும் அஹிம்சா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ரசிகர்கள்: விஜய் படங்களை எப்போதுமே இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் கோட் படமும் ஏராளமான வெளிநாட்டு ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் இன்னும் இரு மாதங்களில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் இசை வெளியீடு, ட்ரெய்லர் வெளியீடு ஆகியவை மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சரியான திட்டமிடலுடன் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு சிறப்பான ப்ரமோஷன்களையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications