Actor Vijay: நாளை மாலை வெளியாகும் விஜய்யின் கோட் பட ட்ரெயிலர்.. மிரட்டும் புதிய போஸ்டர்!
சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார்.
கோட் படத்தில் மகன் விஜய் கேரக்டருக்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் 3வது சிங்கிள் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங், டப்பிங் பணிகள் என அனைத்துமே ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் படம் இன்னும் இரு வாரங்களில் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் அடுத்தடுத்து ஈடுப்பட்டு வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகும் ட்ரெயிலர்: ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாகவே படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் அதிலும் சில சொதப்பல்கள் காணப்பட்டது. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்றைய தினம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றுடன் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகியுள்ளதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. டைம் டிராவலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இந்த புதிய போஸ்டர் அதை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

இரட்டை வேடங்களில் விஜய்: படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் அடுத்தடுத்த பாடல்களிலும் அவரது கேரக்டர்களை பார்க்க முடிந்தது. அப்பா கேரக்டரில் சினேகாவுடன் சேர்ந்து பாடல் பாடிய விஜய், மகன் கேரக்டருக்காக மீனாட்சி சவுத்ரியுடன் சேர்ந்து அதிரடி ஆட்டம் போட்டிருந்தார். மகன் விஜய் கேரக்டருக்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது லுக் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் வெளியாகவுள்ள படத்தின் ட்ரெயிலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் திட்டம்: விஜய்யின் கோட், தொடர்ந்து தளபதி 69 படங்களுடன் அவர் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக முன்னதாக அறிவித்துள்ளார். இதனால் இந்த இரு படங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன. தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், கோட் படத்தின் ரிலீசுக்கு பின்பு இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு சூட்டிங் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











