Actor Vijay: 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் வாய்சில் மெலடி ட்ரீட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் இன்றைய தினம் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அவர் முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தார். ஆயினும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படக்குழுவினர் அவரது பிறந்த நாளை, அடுத்தடுத்த வெளியீடுகளால் சிறப்பாக்கியுள்ளனர்.
நேற்றிரவு 12 மணியளவில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷாட்ஸ் வெளியிடப்பட்டது இந்நிலையில் தற்போது படத்தின் 2வது சிங்கிளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை நடிகர் விஜய் மறைந்த பாடகி பவதாரணியுடன் இணைந்து பாடியுள்ளார். படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது 2வது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் சிங்கிள் விசில் போடு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி இந்த படத்தின் 2வது சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாடல் விசில் போடு என அதிரடி சரவெடியாக வெளியான சூழலில் தற்போது சின்ன சின்ன கண்கள் என்ற மெலடி பாடலை யுவன் சங்கர் ராஜா 2வது சிங்கிளாக கொடுத்துள்ளார்.
விஜய் -பவதாரணி பாடல்: இந்த பாடலின் ஸ்பெஷல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். மிகச் சிறப்பான மெலோடி ட்ரீட்டாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். முன்னதாக விசில் போடு பாடல், விஜய் வாய்சில் வெளியான நிலையில் தற்போது சின்ன சின்ன கண்கள் பாடலும் விஜய் வாய்சிலேயே வெளியாகியுள்ளது. இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். சின்ன சின்ன கண்கள் பாடல் தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சின்ன சின்ன கண்கள் பாடல்: லிரிக் வீடியோவாக சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் சினேகா மற்றும் விஜய் இருவரும் குழந்தையுடன் உற்சாக கொண்டாட்டத்தில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. மேலும் சினேகா கர்ப்பமாக இருப்பதாகவும் இந்த லிரிக் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் மூன்று கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளதாக கூறப்படும் சூழலில் அதை நிரூபிக்கும் வகையில் விஜய்க்கு இரண்டு மகன்கள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த பாடலில் அப்பா விஜய் மற்றும் அவரது மனைவியாக சினேகா காணப்படுகின்றனர்.
விஜய் -ஸ்நேகா ஜோடி: முன்னதாக இந்த ஜோடி வசீகரா படத்தில் இணைந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது மீண்டும் கோட் படம் மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் தான் அனைத்து காட்சிகளிலும் இணைந்துள்ளதாக முன்னதாக சினேகா தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள சின்ன சின்ன கண்கள் பாடலில் இவர்கள் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக காணப்படுகிறது. தன்னுடைய படங்களில் அவ்வப்போது பாடல்களை பாடிவரும் நடிகர் விஜய் பல ஹிட்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த பாடலில் அவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுக்கு மெலடி ட்ரீட் கொடுத்துள்ளார். இதை இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











