Actor Vijay: கோட் படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.. 2வது சிங்கிள் எப்பங்க?

சென்னை: நடிகர் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் கோட். இந்தப் படத்தில் நடிகர் விஜய் தன்னுடைய போர்ஷன்களை முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். செப்டம்பர் 5ம் தேதி படம் ரிலீசாகவுள்ள சூழலில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Actor Vijay s GOAT movie shooting spot still released by Archana kalpathi

நடிகர் விஜய்: நடிகர் விஜய் -இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிவரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த படத்தின் சூட்டிங் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் விஜய் தனது போர்ஷனை நிறைவு செய்துள்ள சூழலில் விரைவில் சில பேட்ச் வேலைகளை படக் குழுவினர் மேற்கொண்டு படத்தின் சூட்டிங்கை ஒட்டுமொத்தமாக நிறைவு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: படத்தில் நடிகர் விஜய்யின் டீ ஏஜிங் வேலைகளுக்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அங்கு விஜய்யின் பிரத்யேக காட்சிகளை இரு தினங்கள் சூட் செய்து டீ ஏஜிங் வேலைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்ததாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actor Vijay s GOAT movie shooting spot still released by Archana kalpathi

நட்சத்திர பட்டாளம்: இந்த புகைப்படத்தில் விஜய் -வெங்கட் பிரபு இருவரும் மானிட்டரை பார்த்து டிஸ்கஸ் செய்வதாக காணப்படும் சூழலில் அருகிலிருந்து இதை அர்ச்சனா கல்பாத்தி பார்ப்பதாக காணப்பட்டது. இந்த படம் குறித்து படத்தின் நடிகர்கள் அதிகமாக பேசி வருகின்றனர். முக்கியமான விஷயங்கள் எதையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் படத்தில் கேமியோ கேரக்டர்களில் மறைந்த நடிகர் விஜயகாந்த், சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

விஜய்யுடன் மீண்டும் இணைந்த திரிஷா: நடிகர் விஜய்யுடன் பாடல் ஒன்றில் நடிகை திரிஷா இணைந்து நடனமாடியுள்ளார். படத்தின் விஜய்யுடன் அதிகப்படியான நடிகர்கள் இணைந்துள்ள சூழலில் அவர்கள் அனைவருக்கும் வெங்கட் பிரபு சமமான கேரக்டர்களை கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் அவ்வப்போது படம் குறித்த புகைப்படங்கள், போஸ்டர்கள், அறிவிப்புகள் என தொடர்ந்து வெளியிட்டு வருவது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. கோட் மற்றும் தளபதி 69 படங்களுடன் விஜய் சினிமாவிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்தப் படங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X