ப்ளீஸ் வெயிட்.. விஜய்யின் கோட் பட ட்ரெயிலர் குறித்து நாளை அறிவிப்பு.. அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் விரைவில் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இதுகுறித்து படக்குழுவினர் எந்தவித அப்டேட்டும் தெரிவிக்காத நிலையில் தற்போது படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கோட் பட ட்ரெயிலர் குறித்த அப்டேட்டை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாளைய தினம் ட்ரெயிலர் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Vijay GOAT movie Archana kalpathi

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாக இன்னும் ஒரு மாத காலம்கூட இல்லாத நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸுக்காக வெயிட்டிங்கில் உள்ளனர். இந்த படத்துடன் தளபதி 69 படத்தையும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக முன்னதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். தீவிர அரசியலில் அவர் ஈடுபட உள்ளதாகவும் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

GOAT படம்: தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், கோட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய், வெங்கட் பிரபுவை மிகப்பெரிய அளவில் பாராட்டி பேசியதாக சமீபத்தில் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளன. கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. இதில் மூன்றாவதாக வெளியாகி உள்ள பாடலில் படத்தில் மகனாக நடித்துள்ள நடிகர் விஜயின் லுக் வெளிப்பட்டுள்ளது.

Vijay GOAT movie Archana kalpathi

அடுத்தடுத்த பாடல்கள்: விஜய்யின் டீ ஏஜிங் செய்யப்பட்ட லுக் இந்தப் பாடலில் காணப்பட்ட நிலையில், பல விமர்சனங்களை இந்தப் பாடல் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் விரைவில் ரிலீசாக உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே தற்போது படத்தின் கிரியேட்டில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படத்தின் ட்ரெயிலர் குறித்த மெசேஜ் ஒன்றை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் அதிரடியான ட்ரெயிலர் உருவாகி வருவதாகவும் ரசிகர்கள் சில தினங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்: ரசிகர்கள் அமைதியுடன் காத்திருக்கும்படியும் சில தினங்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். மேலும் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் குறித்த முறையான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. பாடல்களில் யுவன் சங்கர் ராஜா சரியான அவுட்புட்டை கொடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பிஜிஎம் கிங் என கொண்டாடப்படும் யுவன் சங்கர் ராஜா, கோட் படத்தின் பிஜிஎம்மில் புகுந்து விளையாடி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது இந்த படத்தின் ட்ரெயிலரிலும் வெளிப்படும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X