Actor Vijay: கோட் பட ட்ரெயிலர் வெளியீட்டில் மாற்றம்.. நெருக்கடிக்கு உள்ளானாரா வெங்கட் பிரபு?
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களிலும் திரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் கேமியோ கேரக்டர்களிலும் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து கோட் படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் காணப்படுகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையே, அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் வெளியீடு திட்டமிடப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள கோட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி என இருவர் இணைந்துள்ளனர். மேலும் லைலா, த்ரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களும் படத்தில் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
அடுத்தடுத்த பாடல்கள்: பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட வெங்கட் பிரபுவின் கேங்கும் கோட் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் அடுத்தடுத்து மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் சமீபத்தில் வெளியான படத்தின் மூன்றாவது பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தன்னுடைய தங்கை பவதாரணியின் மரணம் மற்றும் குடும்பத்தில் ஒரு சில சிக்கல்கள் காரணமாக இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது யுவன் மீண்டும் தன்னுடைய கொண்டாட்டத்தை துவங்கியுள்ளார். அவரது கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பிஜிஎம்மில் பிடித்த யுவன்: இந்நிலையில் படத்தின் பாடல்களில் தவறவிட்டதை படத்தின் பிஜிஎம்மில் அவர் பிடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே படத்தின் ட்ரெயிலர் வெளியீடு வரும் 19ம் தேதி என முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதிலிருந்து ஒரு நான்கு நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படத்தின் டிரைலர் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நிலையில் சுதந்திர தினத்தையொட்டி ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டால் அது கண்டிப்பாக ஏராளமான ரசிகர்களை சென்றடையும் என்று தயாரித்து தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நெருக்கடியில் வெங்கட் பிரபு?: மேலும் படத்தின் பாடல்களில் தவறவிட்டதை அடுத்ததாக வெளியாக உள்ள ட்ரெயிலரில் பிடிக்க வேண்டும் என்று இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பு தரப்பு கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் ட்ரெய்லரில் இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பு தரப்பு வெங்கட் பிரபுவிடம் உறுதியாக கூறியுள்ளதாகவும் தற்போது அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் இந்த ட்ரெயிலர் சிறப்பாக வெளிக் கொண்டுவர வேண்டிய நெருக்கடியில் வெங்கட் பிரபு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











